அவதானம் - ஹட்டனில் போலி சுகாதர பரிசோதகர் மற்றும் விலைக்கட்டுப்பாட்டு அதிகாரி

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
ட்டன் நகர வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதகராகவும் விலைக்கட்டுப்பாட்டு அதிகாரியாகவும் தன்னை அறிமுகம் செய்து கொண்டு லஞ்சம் வாங்க முற்பட்ட சம்பவமொன்று 12.07.2017 ஹட்டனில் இடம்பெற்றுள்ளது. சீ.சீ.டீ.வி கமரா பொருத்தாக வர்த்தக நிலையங்களிலே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்;

ஹட்டன் நகரிலிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தன்னை நுவரெலியா மாவட்ட விலைக்கட்டுப்பாட்டு காரியலய அதிகாரி என கூறி ஹோட்டலில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் வழக்கு பதிவு செய்தால் 25.000 ரூபா வரையில் தண்டம் அரவிடப்படும் எனவும் கூறி வழக்கு பதிவு செய்யாதிருக்க பணம் தருமாறும் கோரியுள்ளார் 

ஹோட்டலில் கடமையில் இருந்தவர் உரிமையாளர் இல்லையென்றும் தன்னால் பணம் வழங்க முடியாது எனவும் தெரிவித்த நிலையில் குறித்த போலி விலைக்கட்டுப்பாட்டு அதிகாரி மீண்டும் ஒரு மணித்தியலாயத்தில் வருவதாகவும் அதற்குள் பணத்தை தயார் செய்து வைக்குமாறும் தெரிவித்து சென்றுள்ளார்.

அதே வேலை பலசரக்கு கடையொன்றுக்கு சென்ற அதே நபர் தான் சுகாதார பரிசோதகர் என அறிமுகம் செய்து பல்வேறு குறைபடுகள் காணப்படுவதாக கூறி லஞ்சம் கோரியுள்ளர். குறித்த நபர் மீது சந்தேகம் கொண்ட கடையுரிமையாளர் தனது கைபேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டு போலியாக வந்த சுகாதார பரிசோதகரிடம் அடையாள அட்டையை கோட்ட போது உடனடியாக அவ்விடத்திலிருந்து தப்பி ஒடியதாக கடை உரிமையாளர் தெரிவித்தார். 

சம்பவம் தொடர்பில் நுவரெலியா விலைக்கட்டுபாட்டு அதிகாரிகளுக்கும் ஹட்டன் டிக்கோயா நகரசபை பொது சுகாதார பரிசோதகர் ராமையா பலகிருஸ்னன் ஆகியோருக்கு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் முறையிட்டதையடுத்து வர்த்த நிலையங்களுக்கு வருகைத்தந்த அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டதுடன் சந்தேகத்திற்கிடமாக வருகைத்தருவோரிடம் அடையாள அட்டையை காட்டுமாறு கேட்கும் படியும் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக எமது காரியலயங்களுக்கு அறிவிக்குமாறும் வர்த்தகர்களுக்கு அறிவுருத்தல் விடுத்தனர்.

மேலும் கைபேசியின் படத்தில் கணப்படும் சந்தேக நபரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -