இலங்கையில் முதலிடுகிறார் சவூதி இளவரசர் அல் வலீத்:

வூதி அரே­பி­யாவின் இள­வ­ர­சரும் உலகின் முன்­னணி தொழி­ல­தி­பரும் கொடை­வள்­ள­லு­மான அல் வலீத் பின் தலால் பின் அப்துல் அஸீஸ், நேற்­றைய தினம் இலங்­கைக்கு விஜயம் செய்து ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சர் ஆகி­யோரைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­துடன் இலங்­கையின் பல்­வேறு துறை­க­ளிலும் முத­லீடு செய்யத் தயா­ரா­க­வுள்­ள­தா­கவும் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

நேற்றுக் காலை தனது வர்த்­தக தூதுக் குழு­வினர் சகிதம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டு சுமார் நான்கு மணி நேரம் மாத்­தி­ரமே இங்கு தங்­கி­யி­ருந்த அவர், வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க, பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க மற்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோரை தனித்­த­னி­யாகச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினார்.

ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பில் இலங்­கையின் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி குறித்து மகிழ்ச்சி வெளி­யிட்ட அவர், இலங்­கையின் சுற்­றுலாத் துறை உட்­பட பல்­லேறு துறை­களில் பாரிய முத­லீ­டு­களைச் செய்ய தான் விருப்பம் கொண்­டுள்­ள­தாகக் குறிப்­பிட்டார்.

அத்­துடன் இலங்கை முத­லி­டு­வ­தற்­கான சிறந்த களம் என்­பதை ஏனைய சவூதி முத­லீட்­டா­ளர்­க­ளிடம் சிபா­ர்சு செய்­வ­தா­கவும் இலங்­கையில் உள்ள வர்த்­தக வாய்ப்­புகள் குறித்து சவூதி முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தும் நோக்கில் சவூதி அரே­பி­யா­வுக்கு விஜயம் செய்­யு­மாறும் அவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அழைப்பு விடுத்தார்.

சவூதி அரே­பியா தொன்­று­தொட்டே இலங்­கையின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்­காக வழங்கும் ஒத்­து­ழைப்பை பாராட்­டிய ஜனா­தி­பதி, அண்­மையில் வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்ட இலங்கை மக்­க­ளுக்கு இள­வ­ரசர் வலீத் வழங்­கிய நிதி உத­வி­யையும் பாராட்­டினார்.

அத்­துடன் சவூதி அரே­பி­யாவில் பணி­யாற்றும் சுமார் நான்கு இலட்சம் இலங்­கை­யர்கள் நாட்டின் பொரு­ளா­தா­ரத்­துக்கு பெரும் பங்­க­ளிப்பு நல்­கு­வ­தா­கவும் ஜனா­தி­பதி தெரிவித்தார்.

இச் சந்திப்பின்போது சவூதி இளவரசர் அல்வலீத் பின் தலால் பின் அப்துல் அஸீஸுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட விருதொன்றை வழங்கி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -