
பாறுக் ஷிஹான்-
மானிப்பாயைச் சேர்ந்த இளைஞன் மீது மோட்டார் சைக்கிள்களில் சென்ற கும்பல் நேற்று (30)மதியம் வாளால் வெட்டினர். வாள்வெட்டில் தனு ரொக் குழு என்று கூறிக்கொள்ளும் குழுவைச் சேர்ந்த தனு என்ற இளைஞரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தனு ரொக் குழுவைச் சேர்ந்த தனுவை நேற்று முற்பகல் 11 மணிக்கு மோட்டார் சைக்கிள் வாள்வெட்டுக் கும்பல் சென்று தேடியுள்ளது. இதன் பின்பு அந்தக் கும்பல் அங்கிருந்து சென்றுள்ளது. பிற்பகல் 2.30 மணியளவில் வாள்வெட்டுக் கும்பல் மீண்டும் மானிப்பாய்க்கு வந்துள்ளது.
தனு ரொக் தனது வீட்டிலிருந்து சிறிது தொலைவில் உள்ள ஆலயத்தில் இன்னொரு இளைஞனுடன் கதைத்துக் கொண்டு நின்றுள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிள்களில் சென்ற வாள்வெட்டுக் கும்பல் தனுவைக் கலைத்துக் கலைத்து வெட்டியுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இந்த வாள்வெட்டுக் குறித்து 2 முறைப்பாடுகள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்குக்கு கிடைத்துள்ளன. அவை மோதலில் ஈடுபட்ட இரு தரப்பைச் சேர்ந்தவர்களால் வழங்கப்பட்டன' என்று பொலிஸார் தெரிவித்தனர்.
