கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் பீ.தயாராத்ன அல்லது முன்னாள் அமைச்சர் அதாவுட செனிவிரத்ன ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனாண்டோ ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே முன்னாள் அமைச்சர்களான மேட்படி இருவரில் ஒருவரை நியமிக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
தயாராத்னவை நியமிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விருப்பம் தெரிவித்துள்ளாராம்.
இதேவேளை, ஜனாதிபதி கிழக்கில் சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதற்காக தனது கட்சி சார்பாக அதாவுட செனெவிரத்னவை நியமிக்க ஆர்வம் காட்டுவதாக மேலும் தெரியவருகின்றது.