சிறப்பாக நடைபெற்ற, சுவிஸ் “புளொட்” அமைப்பின் 28வது வீரமக்கள் தினம்.. படங்கள் இணைப்பு









சுவிஸ் புளொட் அமைப்பின் சார்பில் 28ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் கடந்த 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று, மதியம் 15.00 மணி முதல் மாலை 19.00 மணிவரை சிறப்பாக நடைபெற்றது.

முதலில் அன்றையதினம் காலை, தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தினால், சுவிஸ் வாழ் மாணவ மாணவியருக்கான "அறிவித்திறன்" பரீட்சை, தோழர் சிவாவின் பொறுப்பில், திருமதி.புனிதா இரத்னகுமார், திருமதி.சந்திரா அரிராஜசிங்கம், செல்வன்.தர்சன் செல்வபாலன், அவரது நண்பர்கள், மற்றும் செல்வி.அ.ஆர்த்திகா, செல்வி.இலக்ஸா சிவானந்தசோதி ஆகியோரின் பங்களிப்பில் சிறப்பாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மாலை மூன்று மணியளவில் புளொட் சுவிஸின் 28வது "வீரமக்கள் தினம்" தோழர் ரஞ்சன் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக, மங்கள விளக்கேற்றலை புளொட் ஜெர்மன் கிளைத் தோழர் யூட், ஜெர்மனில் இருந்து வருகை தந்திருந்த தோழர் கலாகரன், சுவிஸ் கிளைத் தோழர்களான தீபன், தேவண்ணர், திரு.வேந்தன், திருமதி.வதனாம்பாள் புஷ்பானந்த சர்மா, திருமதி ஜெயவாணி குகராஜாசர்மா, திருமதி.புனிதா இரத்னகுமார், திருமதி.சந்திரா அரிராஜசிங்கம், திருமதி.செல்வி கருணாகரன் (பிரபா) ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

இதனைத் தொடந்து மேடையில் வைக்கப்பட்டு இருந்த அனைத்து அமைப்புக்களின் தலைவர்கள், போராளிகளின் உருவப் படங்களுக்கு, கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்த, அனைவராலும் மலரஞ்சலி செய்யப்பட்டது. அத்துடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தோழர் மனோவினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், இந்திய கேரளா மாநிலத்தை சேர்ந்த குழந்தைகள் இருவரினால் வரவேற்பு நடனமும் நடத்தப்பட்டது. அத்துடன் மேற்படி மாணவிகளும், மாணவிகளின் குடும்பத்தினரும், தோழர் ரஞ்சன், திருமதி ஜெயவாணி குகராஜாசர்மா ஆகியோரினால் கௌரவிக்கப் பட்டனர்.

விழாவின் ஆரம்பத்தில் வினோத உடைப் போட்டி, நடைபெற்று அதனை தொடர்ந்து, நடன, நாட்டிய நிகழ்வுகள், சிறுவர் பாட்டு, விருந்தினர்கள் உரை, நன்றியுரை, ஆகியவற்றுடன் தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட பரீட்சைப் போட்டியில் வெற்றியீட்டிய மற்றும் பங்குபற்றிய, அனைத்து மாணவ, மாணவிகளுக்குமான பரிசில்கள் வழங்குதலும் நடைபெற்றது.

குறிப்பாக விழாவில் பல்வேறு விதமான, நடன நாட்டிய நிகழ்வுகள் நடைபெற்று அனைத்து மக்களின் பாராட்டுதலையும் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. விழாவினை திருமதி. ஜெயவாணி குகராஜாசர்மா அவர்கள் மிக சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

திரு.பொலிகை ஜெயா தலைமையில், சுவாரசியமான பட்டிமன்றம் திரு.செல்வராஜா மாஸ்ரர், திரு.மூர்த்தி மாஸ்ரர், திரு.சண்முகராஜா, திரு.பற்றிக் ஆகியோர் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

விருந்தினர்கள் உரையில் சுவிஸ் சூரிச் தமிழர் கலாச்சார மன்றம் சார்பாக திரு. இரத்னகுமார், சூரிச் சயன்ஸ் அக்கெடமி சார்பாக திரு.கணபதிப்பிள்ளை ஆசிரியர், ஜெர்மனியில் இருந்து கலந்து கொண்ட தோழர் கலாகரன் ஆகியோர் உரையாற்ற, “புளொட்” அமைப்பின் சார்பாக தோழர் ரஞ்சன் புளொட் அமைப்பின் பிரித்தானியக் கிளையின் அறிக்கையினையும், தோழர் மனோ, புளொட் மத்தியகுழு உறுப்பினர் தோழர் விசுவின் அறிக்கையினையும் வாசித்தனர்.

நன்றியுரையினை தோழர் சிவா வழங்கி இருந்தார். இவர் தனது உரையில், “பல நடன நிகழ்சசிகளை" தனது மாணவிகள் மூலம் வழங்கி இருந்ததுடன் நிகழ்வையும் சிறப்பாக தொகுத்து வழங்கிய திருமதி ஜெயவாணி குகராஜாசர்மா, மற்றும் இன்றைய நிகழ்வுக்கு பல வழிகளிலும் உதவிபுரிந்த திருமதி. புனிதா இரத்னகுமார், திருமதி. சந்திரா அரிராஜசிங்கம், திருமதி. கௌரி ஜெகநாதன் ஆகியோருக்கும்..

மற்றும் பலவழிகளிலும் உதவி புரிந்த தோழர்கள் வரதன், காந்தன், ரமணன், ஜெகன் அண்ணர், முருகதாஸ், குமார் அண்ணர், அசோக், சித்தா, ராசன், ஆனந்தன், பாபு, சங்கர், பிரபா, ரமணன், கந்தசாமி, தேவண்ணர், புவி, குணம், திரு.அரிராஜசிங்கம் உட்பட அனைவருக்கும்,

மற்றும் மண்டப ஒலியமைப்பை சிறப்புடன் வழங்கி இருந்த திரு.குமார் (பாசெல்) மற்றும் அவரது நண்பருக்கும், மண்டப அலங்காரத்தை வழங்கி இருந்த திரு.நவம் அவர்களுக்கும், வீடியோ உதவி புரிந்த திரு.ஞானம், மற்றும் பரீட்சை போட்டியின் போது உதவி புரிந்த அனைவருக்கும் உட்பட மற்றும் பலவழிகளிலும் உதவி புரிந்த “பெயர் குறிப்பிட்ட, குறிப்பிட மறந்த” அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

நன்றி அறிவித்தலைத் தொடர்ந்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மேற்படி பரிசில்களை வயதில் மூத்தோர், விருந்தினர்கள், உதவிகள் புரிந்தோர், கழகதோழர்கள் ஆகியோரினால் நிகழ்வுகளை தந்தோர்கள், உதவிகள் புரிந்தோருக்கான பரிசில்களும், மாணவ மாணவிகளுக்குமான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தது.

மேற்படி "வீரமக்கள் தின" நிகழ்வில், கழகதோழர்கள், ஆதரவாளர்கள், ஆகியோருடன் பெரியோர்கள், குழந்தைகளென பொதுமக்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -