மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடமிருந்து அவரது அமைச்சுப் பறிக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை மாற்றங்களின் வரிசையில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரையும் மாற்றவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருப்பதால், இத்தகைய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகத் தற்பொழுது இருக்கும் மஹிந்த அமரவீரவுக்கு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வழங்கப்படவுள்ளதாகவும், பைஸர் முஸ்தபாவுக்கு மஹிந்த அமரவீரவின் அமைச்சு வழங்கப்படவுள்ளதாகவும் அறிய முடிகிறது.
இந்த அமைச்சர்களின் மாற்றம் இன்னும் சில நாட்களில் இடம்பெறவுள்ளதுடன், உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் தொடர்பிலான முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.