மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து குதித்துள்ள பாடசாலை மாணவன் ஒருவனை தேடும் பணியில் காவற்துறை ஈடுபட்டுள்ளனர்.இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயர் தரத்தில் கணிதப்பிரிவில் கல்வி கற்று வந்த மாணவனே இவ்வாறு பாலத்தில் இருந்து குதித்துள்ளார்.க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் 8 ஏ 1 பீ சித்தியைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டிலிருந்து பாடசாலைக்கு சென்ற மாணவனே இவ்வாறு பாலத்தில் இருந்து குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த மாணவன் பாலத்தில் இருந்து குதித்தமைக்கான காரணங்கள் இதுவரையில் தெரியவரவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.