ஹஸ்பர் ஏ ஹலீம்-
பெருநாள் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சினேகாபூர்வ உதைப்பந்தாட்ட போட்டியில் 2:1 என்ற கோல் கணக்கில் மாகாண சாம்பியன்ஸ் கிண்ணியா நேஷனல் அணி வெற்றி பெற்றனர்.
இப்போட்டியானது இன்று ( 27) செய்வாய்கிழமை கிண்ணியா குறுஞ்சக்கேர்னி வி சி மைதானத்தில் இடம் பெற்றதுடன் இதில் கிண்ணியா நேஷனல் விளையாட்டு கழகம் மற்றும் மூதூர் இக்பால் விளையாட்டு கழகம் ஆகிய இரண்டு அணிகள் ஒன்றையொன்று மோதின.
மேலும், இப்போட்டியை ஏற்பாடு செய்த கிண்ணியா நேஷனல் அணியின் பிரதான வீரரும் மூதூர் விளையாட்டு உத்தியோகத்தருமான ஏ.எம்.வாரித் அவர்களுக்கும், கிண்ணியா நேஷனல் அணியின் நிருவாக உறுப்பினர்களுக்கும், பரிசில்கள் வழங்கி கௌரவித்த அத்துணை நல்லுள்ளங்களுக்கும் எமது இக்பால் அணி சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.


