ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
திருகோணமலை மல்லிகைத்தீவில் கடந்த 28ம் திகதி மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சம்பவத்தை கண்டித்தும் நீதிகோரியும்; திங்கட்கிழமை 05.06.2017 கிழக்;குப் பல்கலைக் கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்குப் பல்கலைக் கழக தமிழ் மாணவர்களின் ஏற்பாட்டில் வந்தாறுமூலை வளாக விடுதியிலிருந்து பேரணியாக வந்த மாணவர்கள் பல்கலைக் கழக முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'நாமத்தில் மட்டும் நல்லாட்சியா!, நீதி வேண்டும் பெண்கள் நீண்டு வாழ, பிஞ்சுகளை வதைக்கும் நஞ்சுகளை தூக்கிலிடுங்கள், சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் பாழாக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, மொட்டுக்களை மலர விடுங்கள்' போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி மாணர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது வித்தியா மற்றம் சேயா போன்ற சிறுமிகளுக்கு நடந்த சம்பவங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு கிழக்கு பல்கலைகழகத்தில் கற்கும் கலைத்துறை மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்