வீதி விபத்தில் மூதாட்டி பலி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் வீதியைக் கடந்து கொண்டிருந்த மூதாட்டி பலியானதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கள் மாலை (19.06.2017) இடம்பெற்ற இவ்விபத்தில் தும்பங்கேணி கிராமத்தைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை கிருபையம்மா (வயது 70) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

மேற்படி மூதாட்டியை மோதிய மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பங்கேணி திக்கோடை வீதியில் அதிவேகமாகப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் அவ்வீதியைக் கடக்க முற்பட்ட மூதாட்டி மீது மோதியுள்ளது.

பலத்த காயங்களுக்குள்ளான மூதாட்டி களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -