ஏ.எஸ்.எம்.தாணீஸ் ஒ.கியாஸ்-
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள "முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையும் அதற்கான தீர்வினையும் நோக்கி எனும் தொணிப்பொருளிலான ஆய்வரங்கு" இன்று 18 ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கிண்ணியா மஜ்லிஸ் அஷ்-ஷுறா அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம்.ஹிதாயத்துள்ளாஹ் (நளீமி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டத்திலுள்ள குச்சவெளி,மூதூர்,கிண்ணியா,தம்பலகாமம்,கந்தளாய்,மொறவெவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டு காணிப்பிரச்சினை ஆய்வுகளை முன்வைத்தனர்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப் கலந்து கொண்டு பிரச்சினை தொடர்பாக கருத்துரை வழங்கினார்.


