சூழ்ச்சி செய்தவர்களை இறைவன் இணங்காட்டிவிட்டான் - மஹிந்த

நீங்கள் ஒரு நாளைக்கு ஐந்து தடவை உங்கள் இறைவனை வணங்குறீர்கள். யார் முஸ்லிம்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தார்கள் என்பதை உங்கள் இறைவன் உங்கள் கண்முன்னே விரைவில் காட்டுவார்" என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறி சரியாக இன்று ஒரு வருடம் ஆன நிலையில் இன்று நல்லாட்சி அரசு முக்காடு களைந்து நிர்வாணமாகி நிற்கிறது.

கடந்த வருடம் பேருவளையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். கடந்த வருடம் அவர் மேற்கூறிய விடயத்தை கூறும் போது அவரை பார்த்து ஏளனமாக சிரித்த முஸ்லிம் சமூகம் இன்று இந்த நல்லாட்சியாளர்களுக்கு இறையாகிவிட்டோமே என்ற ஏக்கத்தில் தவித்து நிற்கிறது.

உலக வரலாற்றில் நாம் கண்டிராத அளவுக்கு ஞானசார என்கிற தேரர் அல்லாஹ்வை இழிவு படுத்திவிட்ட பின்பும்எமது அமைச்சர்கள் பலவகைகளிலும் அலுத்தம் கொடுத்த பின்பும் இந்த அரசாங்கம் ஞானசாரவை பாதுகாக்கிறது என்பதை வைத்தே இந்த அரசாங்கத்துக்கும் ஞானசாரவுக்கும் உள்ள உறவு என்ன என்பதை நாம் ஊகித்துக்கொள்ளமுடியும் .

இவ்வளவு காலமும் அறையில் ஆடியவர்கள் இப்போது அம்பலத்தில் ஆடவேண்டிய நிலை தோன்றியுள்ளதால் அவர்களது நிர்வாணம் முஸ்லிம் சமுகத்திடம் இன்று வெளிப்பட்டுள்ளது. உணர்ச்சிகளுக்கு அடிமைப்படாமல் உண்மையான இனவாதிகள் யார் என்பது விடயத்தில் மிகவும் அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.
அ.அஹமட்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -