இரத்தினபுரியில் மத வேறுபாடு இல்லாமல் உதவும் அமைச்சர் றிஷாத்

ஊடகப்பிரிவு -
ரத்தினபுரி தொகுதிக்கு உட்பட்ட பாதிக்கப்பட்ட விகாரைகள், பள்ளிவாசல்கள், இந்து கோவில்களின் புணரமைப்புக்கென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார். இந்தப் பிரதேசத்தில் 14 விகாரைகளும், இரண்டு பள்ளிவாசல்களும், ஒரு இந்து கோவிலும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

இரத்தினபுரி தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களை அமைச்சர் சுற்றி பார்வையிட்ட பின்னர் அங்குள்ள விகாரைகள், பள்ளிவாசல்கள், கோவில்கள் ஆகியவற்றிற்கும் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த பின்னர் அவர்களுக்கு நிவாரண உதவிகளையும், வீட்டுப் பாவனைக்கு தேவையான பொருட்களையும் வழங்கி வைத்தார். இரத்தினபுரி ஸ்ரீ சுமணா ராம விகாரை, ஸ்ரீ போதிராஜாராம விகாரை, இரட்ணேஸ்வரம் சிவன் கோவில், மஸ்ஜிதுல் ஜன்னா முஸ்லிம் ஜும்ஆ பள்ளிவாசல், கொடிகமுவ பள்ளிவாசல் ஆகியவற்றிற்கு விஜயம் செய்து, விகாராதிபதிகளிடமும் தர்மகர்த்தாக்களிடமும் நிதியை வழங்கினார். 

இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அனர்த்த நிவாரண உயர்மட்ட கூட்டத்தின் பின்னர் கஜூகஸ்வத்த விகாராதிபதியிடமும் புனரமைப்புக்கான நிதி உதவியை வழங்கினார். 

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினாலும், மண்சரிவினாலும் இந்த பிரதேசத்தில் 119 வீடுகள் முற்றாக சேதமடைந்தும், 1319 வீடுகள் பகுதியாகவோ அல்லது ஓரளவு பகுதியாகவோ சேதமடைந்து காணப்படுகின்றன. இந்த வீடுகளை மீள நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் ரூபா 25லட்சமும் பகுதியாக சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்கான அனைத்து பொருட்களையும் வழங்கி நிதி உதவி அளிக்க அரசாங்கம் தீர்மாணித்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -