யுத்தம் முடிந்ததும் 12 ஆயிரம் புலிகளை விடுவித்தார் மஹிந்த ராஜபக்ஸ.யுத்தக் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட யுத்தத்தின் பின்னரான அநியாயங்கள் பலவற்றை மூடி மறைத்து சர்வதேசத்திடம் நல்ல பெயரை வாங்குவதற்காகவே அதைச் செய்தார் என்பதை நாம் அறிவோம். ஆனால், இதற்கு அப்பால் இன்னொரு உள்நோக்கமும் மஹிந்தவுக்கு இருந்தது. ஜனாதிபதி தேர்தலின்போது வடக்கு- கிழக்கில் அவருக்கு சார்பாக வேலை செய்வதற்கு விடுவிக்கப்பட்ட புலி உறுப்பினர்களை களத்தில் இறக்குவதே அந்த நோக்கமாகும்.
இந்தப் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய அதிருப்தி வெட்டியிட்டது.அவர்கள் ஒருமுறை மஹிந்தவைச் சந்தித்து அவர்களின் அதிருப்தியை முன்வைத்து அவர்களை மீண்டும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதற்கு பதிலளித்த மஹிந்த '' இதெல்லாம் உள்நோக்கம் கொண்டவை. ஏதோ அவர்கள் மீது அக்கறைகொண்டுதான் அவர்களை விடுவித்தேன் என்று நினைத்தீர்களா? ஜனாதிபதி தேர்தலில் வடக்கு- கிழக்கில் எனக்காக யார் வேலை செய்வார்?. என்றார். அப்போது ஹெல உறுமய மௌனமாக இருந்தது.
தொடர்ந்து கூறிய மஹிந்த;
''இந்த 12 ஆயிரம் பேர்தான் எனக்காக வேலை செய்யப் போகின்றார்கள்'' என்றார்.இதனால் வேறு வழியின்றி ஹெல உறுமய உறுப்பினர்கள் இணங்கிப் போனார்கள்.
[அப்படியென்றால் இப்போது வடக்கில் இயங்குகின்ற ஆவாக் குழு இவங்கள வச்சி நீங்க உருவாக்குனதுதானா சேர்?]
எம்.ஐ.முபாறக் - சிரேஷ்ட ஊடகவியலாளர்