தீயில் கருகிய நிலையில், சடலம் மீட்பு - பெற்றசோ தோட்டத்தில் கொடுரம்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
பொகவந்தலாவ பெற்றசோ டெவன் போல் தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தீயில் கருகிய நிலையில் குடும்பஸ்த்தரின் சடலம் ஒன்று மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் 20.06.2017. செவ்வாய்க்கிழமை மாலை 05 மணி அளவில் இந்த சடலம் இனங்காணபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

குறித்த குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த சுப்ரமணியம் வயது 70 மருதை என்ற வயோதிபர் ஒருவரே தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குறித்த வயோதிபர் சுகயீனமுற்ற நிலையில் தமது வீட்டில் தனிமையாக இருந்து வந்ததாகவும் அந்த வயோதிபரை அவருடைய பிள்ளைகள் கவனித்து கொள்ளபடுதில்லையெனவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

20.06.2017 விடியற்காலை 01 மணியளவில் தனது தந்தை கட்டிலில் அமர்ந்து இருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

20.06.2017 செவ்வாய் கிழமை காலை 11மணி அளவில் வயோதிபரின் மருமகள் அவரைப் பார்வையிட சென்ற போதே குறித்த நபர் தீயினால் கருகி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வயோதிபரின் மகனான திருச்செல்வம் என்பரை பொலிசார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலதிக நீதவானின் மரண விசாரணைக்காக சடலம் குறித்த விடுதியிலே வைக்கப்பட்டுள்ளதோடு நீதவானின் விசாரணையின் பின் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபட உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸாh; மேற்கொண்டு வருகின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -