செய்தி- 01
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் ஶ்ரீலங்கா ஹிரா பெளண்டேசனின் தலைவர் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் ஹிரா பெளண்டேசன் செயலாளர் அஷ்செய்க் ALM மும்தாஸ் மதனி அவர்களுக்கு விடுத்த பணிப்புரைக்கு அமைய ஒரு தொகுதி உணவு அடங்கலான அத்தியவசிய பொருட்கள் காத்தான்குடியில் இருந்து நேற்று (31.05.2017) புறப்படும் படங்களை காணலாம்.
செய்தி - 02
இயற்கை அனர்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவன பாத்திமா பெளன்டேசனின் தலைவர் இக்ராம் சஹாப்தீனினால் ஶ்ரீலங்கா ஹிரா பெளன்டேசனுக்கு நூறு மெட்ரஸ்கள் வழங்கிவைக்கப்பட்டன. இவைகளை ஹிரா பெளண்டேசன் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான MLAM ஹிஸ்புழ்ழாஹ் நாளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவுள்ளார்.
செய்தி - 03
கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலையினால் வெகுவாக பாதிக்கப்பட்ட தென் மாகாணத்திலுள்ள பல பிரதேசங்களில் மீள்குடியேற்ற புனர்வாழ்வு இரஜாங்க அமைச்சர் MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களின் பணிப்புரைக்கு அமைய ஶ்ரீலங்கா ஹிரா பெளண்டேசனின் மீட்பு குழுவினர் தனது நடவடிக்கைளினை முடுக்கி விட்டுள்ளனர்.
சிதைவடைந்துள்ள வீதிகள் இடிபாடுகளுடனான கட்டிடங்கள் மற்றும் பல இன்னல்களுக்கு மத்தியில் தமது நடவடிக்கையினை மேற்கொண்டு வரும் இக்குழுவினருக்கு பிரதேச முக்கியஸ்தர்கள் மத ஸ்தாபனங்கள் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.
இக்குழுவினரின் முதற் கட்ட பணியாக பள்ளிவாயல்கள், விகாரைகள் , மற்றும் பொது நிறுவனங்களினது குடிநீர் வசதிகளை மேம்படுத்தி அகதிகளாக இடம் பெயர்ந்திருக்கின்ற மக்களது குடிநீர் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.