பொதுபல சேனாவின் அட்டாகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நல்லாட்சி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதற்கான ஆவனங்களை கிழக்கு மாகாண சபை ஊடாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்ம நஸீர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் 71வது சபை அமர்வு இன்று (23) காலை சபையின் தவிசாளர் கலபதி தலைமையில் இடம்பெற்ற போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், ஆரிப் சம்சுடீன், உதுமாலெப்பை ஆகியோரினால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள அநீதிகள் தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும், கருத்து தெரிவிக்கையில்;
மஹிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சியின் போது, பேருவளையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பத்திற்கு பின் சிறுபான்மை மக்கள் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய மஹிந்தவை தோல்வியடைய வைத்து மைத்திரி அரசை கொண்டுவதந்தமைக்கு மிக பிரதான காரணம் இவ்வாறான இனாவாத செயலே. அது போல் இவ்வாட்சியிலும் இவ்வாறான செயல்களை இடம்பெறுவதை எம்மால் ஏற்கமுடியாது என்பது இவ்வாட்சியிலும் இன நல்லிணக்கம் இல்லாமல் அநீதிகள் அதிகரித்து வருவதற்கு நல்லாட்சி அரசு கவனத்திற்கொள்ள வேண்டும்.
அது போல், பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் அன்மையில் மிக மோசமான முறையில் பிரதமரை தாக்கி பேசுவதை எம்மால் ஏற்கவும் முடியாது அதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கவலைவுள்ளது. அது போல் கிழக்கு மாகாண சபையிலும் இவ்வாறான இனப்பிரச்சினைகள் தொடர்பில் பிரேரணை எடுத்து வருவதிலும் சிக்கல் உள்ளது, தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக அதிக செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றது குறிப்பாக பள்ளிகளை தாக்குவது, கடைகளை தாக்குவது போன்ற செயல்கள் இடம்பெற்று வருகின்றதையும் இவ்வாறன செயல்பாடுகள் மூலம் இனவாததை அதிகரிக்க தூண்டும் செயலகளை நல்லாட்சி அரசு கவனத்திற்கொள்ள வேண்டுவதுடன் அதற்கு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த நல்லாட்சி அரசின் மூலம் இனங்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். முஸ்லிம், தமிழ், சிங்கள மக்களுக்கு சம உரிமையே. இந்நல்லாட்சி ஊடாக வேறுபாடுகள் எம்முல் இல்லை அவ்வாறு இருக்கவும் கூடாது, அது போல் நாம் வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் இலங்கை என்றால் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாகவும் அதிகம் கேட்கின்றார்கள் அவ்வாறு இலங்கை மோசமான நிலைக்கு மாறியுள்ளதா என்ற கவலை எம்முல் எழுகிறது. நாம் மக்கள் பிரதிநிதிகள் மாகாண சபையிலும், பாராளுமன்றிலும் பேசக்கூடிய அதிகாம் எம்மிடம் உள்ளது.
ஒற்றுமையாக தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடுகள் இல்லாமல் வாழும் போது, வெளிநாட்டு சக்திகளின் மூலம் இலங்கையில் இனப்பிரச்சினையை மதகுருக்கள் என்ற வடிவில் ஆரம்பித்து வருகின்றனர், இதற்கு மிக பிரதான காரணம் வெளிநாட்டு சக்திகளும், பணங்களுமே அத்துடன் சிங்கள மக்கள் கூட இவ்வாறான விடயங்களை விரும்பில்லை. இவ்வாறான பணங்கள் மூலம் இரவுகளில் குடிபோதையில் தங்களது இனவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதை அவதானிக்க முடிகிறது.
ஆகவே, இவ்வாறாக இலங்கை சிறுபான்மை சமூகத்திற்கும், முஸ்லிம் மக்களுக்கும் எதிராக நடைபெறும் அநீதிகளை நல்லாட்சி அரசின் பங்காளிகளும், ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு துறை போன்றவை சரியான முறையில் நடவடிக்கை எடுத்து நல்லாட்சியில் இன ஒற்றுமையுடன் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.