அஷ்ரப் ஏ. சமத்-
சமுக சேவை திணைக்களத்தின் கீழ் உள்ள ஊனமுற்றோா்களுக்காக தெழும்பாயாவில் 226 மில்லியன் ருபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையத்தினை நேற்று(31) சமுக வலுவுட்டல் மற்றும் நலன்நோன்பு அமைச்சா் எஸ்.பி திசாநாயக்க திறந்து வைத்ததாா்.
226 மில்லியன்ருபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக் கட்டிடத்தில் ஊனமுற்ற 100 சிறாா்களுக்கு நவீன முறையில் அவா்களது கல்வி பயிலக்கூடிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அமைச்சா் எஸ்.பி திசாநாயக்க இந் நிலையம் பற்றி தகவல் தருகையில் -
தற்பொழுது இந் நிலையத்தில் 65 ஊனமுற்ற மாணவா்கள் கல்வி கற்று வருகின்றன. இவா்களுக்கு கனணி, பேக்கரி, விவசாயம், மோட்டாா் வாகனம் திருத்துதல், கணனி, திருத்துல் போன்ற பயிற்சிகளுக்கு ஆண், பெண் 100 பேருக்கு இங்கு தங்கி நின்று பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. எதிா்வரும் வருடம் 100 மாணவா்களுக்கு புதிதாக அனுமதிக்கப்பட உள்ளனர். 2012ல் ஆரம்பிக்கப்பட்ட இத் தொழில் பயிற்சி நிலையத்தினை சமுக சேவைகள் திணைக்களம் 174.8 மில்லியன் ருபா ஒதுக்கீடப்பட்டது. அத்துடன் 2014 ஆம் ஆண்டு மேலும் 51 மில்லியன் ருபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெரும் ்ஊனமற்ற இளைஞா் யுவதிகள் தமது சொந்தக் காலில் நின்று இப் பயிற்சி ஊடாக சுயமாக தொழில் பெற்று சிறந்த ஒரு உழைப்பாளியாக வருவதற்கு பெரிதும் நன்மை பயக்கும் எனத் தெரிவித்தாா். இந் நிகழ்வில் கடற்றொழில் மற்றும் மகாவலி இராங்க அமைச்சா் மஹிந்த அமரவீரவும் கலந்து கொண்டாா்