வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான MI-17 ரக உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கியுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (திங்கட்கிழமை) பத்தேகம பிரதேசத்திலேயே மேற்படி விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன், குறித்த விபத்தினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையின் காரணமாக உலங்குவானூர்தியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்கான காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும், இது குறித்த மேலதிக விசாரணைகளை விமானப்படையினர் முன்னெடுத்து வருவதாக விமானப்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
(ஆ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -