முதலமைச்சரின் முயற்சியால் வசதி குறைந்த குடும்பங்களுக்கு இலவச குடிநீர் வழங்கும் திட்டம்


கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் வேண்டுகோளின்பேரில் இலங்கையின் தொண்டு நிறுவனங்களில் ஒன்றான அல்-இஹ்சான் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த வசதிகுறைந்த மக்களுக்கான குடிநீர் இணைப்புக்கள் மற்றும் குழாய்க்கிணறுகள் அமைத்துக்கொடுக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஏறாவூரின் எல்லைப்புறத்தில் இயங்கிவரும் அபூபக்கர் சித்தீக் பள்ளிவாயல் / அரபுக் கல்லூரி, ஜாமியா ஆயிஷா சித்தீக்கியா அரபுக் கல்லூரி ஆகிய இஸ்லாமிய நிறுவனங்கள் தங்களது அத்தியாவசிய தேவையான குழாய்க்கிணறு மற்றும் தண்ணீர்த் தாங்கிகளைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்ததற்கு அமைவாக இன்று தண்ணீர்த் தாங்கிகளும் குழாய் நீர் இணைப்பிற்கான வசதிகளும் அல்-இஹ்சான் அமைப்பினரால் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -