க.கிஷாந்தன்-
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை குயில்வத்தை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று 29.05.2017 அன்று மதியம் 1.30 மணியளவில் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி படுங்காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டி வட்டவளை பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த போது அதன் பின்னால் சென்ற கனரக வாகனம் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதுண்டதால் முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டியில் சாரதி மற்றும் பயணித்துள்ளதாகவும், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.