கெளரவ ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவர்களே இது உங்களின் கவனத்துக்கு..!

ன்று இந்த நாட்டிலே இனவாதம் சில பேரினவாத குழுக்களால் குறிப்பாக ஞானசார என்னும் ஒரு தனி மனிதரால் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்கப்பட்டு மிக மோசமான முறையிலே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. சென்ற அரசாங்கத்தை மஹிந்த ராஜபக்சவை எல்லோரும் ஒன்று சேர்ந்து குறிப்பாக முஸ்லிம்கள் ஓரணியில் திரண்டு வீட்டுக்கு அனுப்பியதுக்கு காரணம் அங்கு இனவாதம் மேலோங்கி காணப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இனவாதத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தலைதூக்க விடமாட்டோம் முற்றாக துடைத்தெரிவோம் என்று மேடைக்கு மேடை செல்லித்தான் முஸ்லிம்களை நம்பவைத்து புதிய அரசாங்கத்தை அமைத்தார்கள். முஸ்லிம்களும் எங்களால் அமையப்பெற்ற அரசாங்கம் என்று பெருமையடைந்தார்கள்.

ஆனால் அன்று இந்த இனவாதி ஞானசார ஹலால் தொடங்கி அளுத்கம, புனித குர்ஆன் என்று தொடர்ந்தபடியே ஆடிக்கொண்டிருந்தவர். இப்போது இந்த நல்லாட்சியில் புத்துயிர் அடைந்ததுபோல் மீண்டும் அவருடைய இனவாத கருத்துக்களும் இனவாத நடவடிக்கைகளும் ஓங்கிருப்பதை பார்த்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது.

காவி உடை அனிந்தால் எது வேண்டுமென்றாலும் செய்யலாம். என்ன வேண்டுமென்றாலும் எப்படியும் பேசலாம் (அதுவும் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டும்) அதை யாரும் கேட்கவோ தடுக்கவோ முடியாது என்ற கேவலமான நிலைப்பாட்டில் ஊருக்கு ஊர் முனங்கி திரிகிறார்.

அதுமட்டுமா தான் உத்தியோகரற்ற பொலிசாகவும் இளைஞ்சர்களும் அவ்வாறு உத்தியோகரற்ற பொலிசாக மாற வேண்டும் எனவும் பகிரங்கமாக அழைப்பும் விடுக்கிறார். இந்த அழைப்பானது நாட்டை அந்நிய நாட்டவர்களிடமிருந்து காப்பாற்றுவதற்கோ,நாட்டை வளர்ச்சி பாதைக்கு இட்டுச் செல்லுவதற்கோ அல்ல. மாறாக இஸ்லாமியர்கள் என்கின்ற ஒரு சிறுபான்மை இனத்தை அழித்து ஒடுக்க வேண்டும் என்ற ஒரு மிருகத்தனமான வெறியாகவே இதை கருதமுடியும்.

காரணம் சுமார் முப்பது வருடத்துக்கும் மேலாக மக்களையும், பாதுகாப்பு வீரர்களையும், நாட்டின் சொத்துக்களையும்,நாட்டை ஆண்டு கொண்டிருந்த தலைவர்களையும் விடுதலைப் புலிகள் அழித்து நாட்டை குட்டிச்சுவராக்கும் போதல்லாம் எந்த இளைஞ்சர்களுக்கு அழைப்பு விடாத இந்த ஞானசார. அன்று கன்னை மூடிக் கொண்டு வீட்டுக்குள் பெட்டி பாம்புபோல் முடங்கி கிடந்த ஞானசார கூட்டணிகள் இன்று நாட்டை காப்பாத்துகிறோம் இனத்தை பாதுகாக்குகிறோம் என்று ஊழை விடுவதை பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகிறது.

இதெல்லாம் இந்த நல்லாட்ச்சி அரசாங்கத்துக்கும் புரியாமலுமில்லை. அப்படி இருந்தும் கண்டும் கானாதுபோல் எந்த சட்ட நடவடிக்கையேனும் எடுக்காமலும் தடுக்காமலும் இருப்பது ஏனோ புரியவில்லை. முஸ்லிம் என்ற இனத்தை அழிக்க தாங்கள் சார்ந்த நல்லாட்சி அரசு ஆதரவு என்பதனாலயா? இல்லை காவி உடை அனிந்திருந்தால் எதையும் செய்யலாம் எங்களால் தடுக்க முடியாது என்பதனாலயா? 

என்ற பாரிய சந்தேகத்தை முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மதிப்புக்குரிய ஜனாதிபதி மற்று பிரதமர் அவர்களே அன்று ஒவ்வொரு பிரதேசத்துக்கும் சென்று இனவாதத்தை தலைதூக்க விடமாட்டோம் என்று கூறி மக்களை நம்ப வைத்துவிட்டு. இன்று அவர்களை தலையில் தூக்கி வைத்துள்ளீர்கள் போல்தான் புரிகிறது. இந்த நல்லாட்சி வருவதற்கு கடுமையாக உழைத்த முஸ்லிம் மக்கள் தமது முழு ஆதரவையும் உங்களுக்கு கொடுத்து ஆட்சியை கொண்டு வந்தது. இப்படியான இனவாதிகள் பிரச்சினையை ஏற்படுத்தும்போது தாங்கள் சார்ந்த அரசு அமைதியாக கைகட்டி வேடிக்கை பார்ப்பதற்கல்ல. நல்லாட்சி நல்லதோர் தீர்வை நீதியாகவும் நியாயமாகவும் பெற்றுக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பிலாகும்.

இன்று அந்த எதிர்பார்பு எல்லாம் தவிடுபொடியாகி விட்டது.

மொத்தத்தில் அந்த மக்களின் பலயீனத்தை பயன்படுத்தி சூட்டோடு சூடாக ஆட்சிபீடம் ஏறுவதற்காகவே அத்தனை பேச்சும் அத்தனை ஆட்டமும் போட்டீர்களே தவிர. சொன்ன விடயங்களை நடைமுறைப் படுத்துவதற்கல்ல என்பது இப்போது தெளிவாக புரிகிறது. இன்னும் இந்த அரசாங்கம் அமைதியாக ஞானசார எதை வேண்டும் என்றாலும் செய்யட்டும் என்றிருந்தால். நிச்சயம் இந்த நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இனக்கலவரம் வருவதை எவராலும் தடுக்க முடியாது.

முப்பது வருட யுத்தத்தை முன்னால் ஜனாதிபதி மஹிந்த அடியோடு அழித்து சாதனையை நிகழ்த்திக் காட்டினார் என்பது வரலாறு. நீங்கள் மீண்டும் அப்படிப்பட்ட பிரச்சினைகளை உண்டாக்கி மியன்மார் போன்றோ குஜராத் போன்றோ இந்த அழகிய இலங்கை நாட்டையும் ஆக்கி மஹிந்த ராஜபக்சவின் சாதனையை முறியடிக்க போகிறீர்களா என்ன? இப்போதைய நிலமையை பார்க்கும்போது முஸ்லிம்கள் ஆதரவில் கொண்டுவந்த ஆட்சி நல்லாட்சி என்று கூறுவதாற்கு கூட வெட்கமாக இருக்கு. அந்தளவுக்கு மிக மோசமாக பாரபட்சமாக நடந்துகொண்டிருக்கு இந்த அரசு முஸ்லிம்கள் விடயத்தில்.

நாங்கள் இந்த நல்லாட்சியிடம் மட்டுமல்ல எந்த ஆட்சி வந்தாலும் கேற்பது ஒன்றை ஒன்றுதான். ஆண்டாண்டு காலமாக சிங்கள,தமிழ் மக்களோடு எந்த பிரச்சினையும் இல்லாமல் சகோதர்களாக வாழ்ந்து வரும் சமூகம்தான் இந்த முஸ்லிம் சமூகம். தொடர்ந்தும் மரணிக்கும்வரை இந்த அழகிய நாட்டில் சட்டங்களை மதித்து சகோதர்களாக வாழ வேண்டும் என்பதே எங்கள் எண்ணமாக இருக்கு. ஆகவே எல்லா மக்களுக்கும் நடு நிலையான நீதியை நிலைநாட்டி பாதுகாப்பை உறுதி செய்து தாருங்கள் என்றுதானே தவிர பதவிபட்மல்ல.

அதுவே இந்த நாட்டையும் முன்னேற்றத்துக்கு இட்டுச் செல்லும்.

இல்லாவிட்டால் இந்த ஞானசாராவோ இல்ல வேறு எந்த சாராவுக்கோ இப்படி மறைமுகமாக பாலூட்டி எல்லா அதிகாரமும் கொடுத்து வளர்ந்து வந்தீர்கள் என்றிருந்தால் நிச்சயம் அவர்களே உங்களுக்கும். உங்களைச் சார்ந்த ஆட்சிக்கு சங்குதுவார்கள் என்பது உறுதி. அதற்குப்பிறகு முஸ்லிம்கள் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள்,ஏமாற்றி விட்டார்கள் என்று கூறுவதில் ஒன்றும் நடக்கப்போவதில்லை. எங்களுக்கு மஹிந்தவும் ஒன்றுதான்,மைதிரியும் ஒன்றுதான்,ரணிலும் ஒன்றுதான் ஏன் அனுரகுமாரவும் ஒன்றுதான் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும் நின்மதியாக இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழ வேண்டும் அவ்வளவுதான்.
ஒலுவில் ஜெலில்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -