இலங்கையில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா நிதியுதவி வழங்க முன்வந்துள்ளார்.
அனர்த்த நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக குறித்த நிதியுதவியை வழங்குமாறு, தலாய் லாமா நிதியத்திடம் தாம் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களுக்கு தமது அனுதாபத்தையும் அனர்த்தத்தால் ஏற்பட்ட இழப்பிற்கு தமது வருத்தத்தையும் தெரிவித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்று (புதன்கிழமை) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே தலாய் லாமா இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் சார்பில் தாம் பிரார்த்திப்பதாகவும் தலாய் லாமா குறிப்பிட்டுள்ளார்.