கிண்ணியாவில் துவரங்குளத்தில் வாழ்ந்து வரும் மீசைக்காரர் என்றழைக்கப்படும் அப்துல் ஹஸன் அன்னாவியார் சீனடியில் பலத்த பட்டங்களைப் பெற்ற இவரின் வயது 88 தற்காப்புக் கலையாகவும் சீனடி விளங்குகின்றது. பல நூற்றுக்கணக்கான இளைஞர்களை சீனடிப் பயிற்சியூடாக தற்காப்புக் கலையை கற்றுக் கொடுத்தவர் தற்போதைய கிண்ணியா துவரங்குளப் பள்ளியில் பள்ளியை பராமரித்து சுமார் 20 வருடகாலமாக எந்த வித ஊதியமும் இன்றி வாழ்ந்து வருகின்றார்.
1932.02.02 ந் திகதி அன்று பிறந்த அன்னாவியார் இற்றை வரைக்கும் வயது முதிர்விலும் தனது சீனடி தற்காப்பு கலையை எடுத்து காட்டுமளவுக்கு வல்லமை படைத்தவர். இது தவிர பல விருதுகளையும் சான்றிதழ்களையும் இத்துறையில் பிரதேச மட்டம் மாகாண மட்டம் வரை பெற்றிருப்பதும் சீனடிச் சுடர் எனும் பட்டத்தையும் பெற்றுள்ளார்.



