ஒற்றை கண்ணுடன் பிறந்துள்ள அந்த ஆட்டை காண அருகில் உள்ள கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். மேலும் அந்த ஆடு புனிதமானது என்றும் அது கடவுளுடைய கொடை என்றும் அவர்கள் கருதி அதனை வழிபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறும்போது, மூளையில் உள்ள வலது மற்றும் இடது ஆகிய இரண்டு பகுதிகளும் சரியாக பிரியாமல் ஒன்றோடு ஒன்று ஒட்டி ஏற்பட்ட பிரச்சனையால் தான் ஒரு கண்ணுடன் இந்த ஆடு பிறந்ததாக கூறுகிறார்கள். ஒருசில நாட்களே உயிரோடு இருக்கும் என மருத்துவர்கள் கூறிய நிலையில் அந்த ஆடு ஆரோக்கியமக உள்ளது.
இது குறித்து ஆட்டின் உரிமையாளர் கூறும்போது, ஒரு கண்ணுடன் ஆடு பிறந்திருப்பது அதிசயமான சம்பவம் என்றும் அந்த ஆடு கடவுளால் கொடுக்கப்பட்டது எனவும் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் அந்த ஆட்டை மிகவும் பத்திரமாக கண்காணித்து வருவதாக கூறிய அவர் மற்ற ஆடுகளுக்கு கொடுக்கும் அதே உணவுகளை தான் இந்த ஆட்டிற்கும் கொடுப்பதாக கூறினார்.
ஒற்றை கண்ணுடன் ஆடு பிறந்திருப்பதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துவருகின்றனர், மேலும் பலர் அதனை புனிதமாக மதித்து வழிபட்டுவருகின்றனர்.ns7.tv