சுகாதார சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பொய்யான பிரச்சாரங்களை பரப்பும் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி சுகாதார அமைச்சினால் குற்றப் புலனாய்வுக் பிரிவினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரவு வேளைகளில் சுகாதார அதிகாரிகள் எனக் கூறிக் கொண்டு சிலர் இரத்த மாதிரிகளை பெறுவது போன்று எயிட்ஸ் நோயை பரப்புவதாகவும் அவர்கள் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சில சமூக வலைத்தளங்களில் ஆதாரமற்ற செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜெயசுந்தர பண்டார சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் பணிப்புரைக்கு அமைய இது குறித்து விசாரணை செய்யுமாறு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.