கோயிலில் தங்கச் சங்கிலியை அபகரித்த பெண்கள் 8 பேர் கைது. சங்கிலியும் மீட்பு



ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

ட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்ட பெரியகல்லாறு முருகன் ஆலயத்தில் திங்களன்று 29.05.2017 நடைபெற்ற பூஜை வழிபாட்டின்போது அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் மூன்றரைப் பவுண் நிறையுடைய தங்கச் சங்கிலி ஒன்று களவாடப்பட்டுள்ளது.

இதன்போது அப்பெண் கதறி சத்தமிட்டுள்ளார் பின்னர் அவ்விடத்தில் கூடிநின்ற பொதுமக்கள் தங்கச் சங்கிலியை களவாடிய ஒரு பெண்ணை மடக்கிப் பிடித்துள்ளதோடு தங்கச் சங்கிலியையும் கைப்பற்றி பொலிஸில் ஒப்படைத்ததாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொலில் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து பொலிஸ் குழுவொன்று உரிய இடத்திற்கு விஜயம் செய்து இக்களவுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 8 பெண்களையும் கைது செய்துள்ளோம்.

இந்தப் பெண்கள் நீர்கொழும்பு, சிலாபம், புளத்சிங்கள, கதுறுவெல போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

ஆனாலும் இவர்களின் சரியான முகவரி இதுவரையில் அறியப்படவில்லை, இவர்கள் தெரிவித்துள்ள தகவல்கள் அனைத்தும் திரிபுபட்டதாக உள்ளன' விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதோடு சந்தேக நபர்களான பெண்களை நீதி மன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -