மூன்று சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 4 இளைஞர்கள் கைது

திருகோணமலை, மூதூர், மல்லிகைத்தீவு பகுதியில் சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முஸ்லிம் இளைஞர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்களை ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து தாக்கியுள்ளதாகவும், அவர்களை கட்டி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டி வைக்கப்பட்ட இளைஞர்களை பொலிஸார் மீட்டதுடன் அவர்களை கைது செய்துள்ளதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்

கட்டட நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களே குறித்த சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த மூன்று சிறுமிகளும் வைத்திய பரிசோதனைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(A)

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -