வலம்புரி கவிதா வட்டத்தின் 37 வது கவியரங்கு..!

லம்புரி கவிதா வட்டத்தின் 37வது கவியரங்கு கொழும்பு அல்ஹிக்மா கல்லூரியில் 10-05-2017 அன்று இடம்பெற்றது. தமிழறிஞர்அ. குமாரசாமி புலவர் அரங்கில் இடம்பெற்ற கவியரங்கில் தமிழ் மிரர் ஆசிரியர் ஏ.பி.மதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் வரவேற்புரை நிகழ்த்த கவிஞர் ஈழகணேஷ் நன்றியுரை வழங்கினார்.வகவத் தலைவர் என்.நஜ்முல் ஹுசைன் நெறிப்படுத்திய நிகழ்வில் கவிஞர் நியாஸ் ஏ. சமத் தலைமையில் கவியரங்கு நடைபெற்றது.

மறைந்த திருமதி அன்னலட்சுமி ராஜதுரையின் கணவர் நாகலிங்கம் ராஜதுரை, இலங்கை வானொலி அறிவிப்பாளர்சற்சொஷரூபவதி நாதன், கலாபூஷணம் நாகூர் கனியின் சகோதரியின் மகன் ஆகியோர் நினைவு கூரப்பட்டனர்.

நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஏ.பி.மதன் அ .குமாரசுவாமி புலவர் குறித்து உரையாற்றும் போது வகவத்தின் பணிகுறித்து சிலாகித்துப் பேசினார். வித்தியாசமான உணர்வுகளுடன் வாசிக்கப்பட்ட காத்திரமான கவிதைகள் மிகுந்த மகிழ்ச்சியைத்தந்ததாகவும் குறிப்பிட்டார். நையாண்டி கவிதைகள்கூட சமுதாய உணர்வோடு பாடப்பட்டது தன்னை மிகவும் கவர்ந்ததாகக்குறிப்பிட்டார். மேலும் அவர் உரையாற்றுகையில், “சுன்னாகம் என்ற ஊரில் 1854ல் குமாரசுவாமி புலவர் அவர்கள் பிறந்தார். தந்தைதமிழ் அறிஞர், சைவ சமயத்தில் ஈடுபாடு கொண்டவர். தமிழ்ப் புலமை பெற்ற குடும்பத்தில் பிறந்த குமாரசுவாமி 5 வயதில் குலகுருவேதாரண்யம் நமசிவாய தேசிகரிடம் ஏட்டுக்கல்வி கற்றார். தந்தையிடம் பல நூல்களை கற்ற பின்னர் மல்லாகம் ஆங்கிலப்பாடசாலையில் சேர்க்கப்பட்டார். 4-ம் வகுப்பு படிக்கும் போது பிள்ளைக்கு ஆங்கிலக் கல்வி தேவையில்லை என்று கருதிய தந்தை,படிப்பை பாதியில் நிறுத்தி, முருகேச பண்டிதரிடம் அனுப்பிவைத்தார்.

நீதி நூல்கள், யாப்பருங்கலக்காரிகை, தொல்காப்பியம் கற்றுத் தேர்ந்தார். கவி பாடுவது, கட்டுரை எழுதுவது, சொற்பொழிவுநிகழ்த்துவதிலும் திறமை பெற்றிருந்ததால், ‘புலவர்’ என்று அழைக்கப்பட்டார். பிறகு புலவர் என்பது அவரின் பெயரில் ஒரு பகுதிபோலானது.

ஆறுமுக நாவலரின் வண்ணார்ப்பண்ணை சைவப் பிரகாச வித்தியாலயத்தில் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். ஆறுமுகநாவலரின் நெருங்கிய நட்பு அவருக்கு கிடைத்தது. வாழ்நாள் முழுவதும் இங்கு பணியாற்றினார். இவரது முனைப்பால் உயர்கல்விநிறுவனமாக இது வளர்ச்சி அடைந்தது. சென்னை மாகாண அரசு சார்பில் 1913-ல் பாதிரியார் சாண்டிலர் தலைமையில்தயாரிக்கப்பட்ட தமிழ் அகராதியை ஆராய்ந்து திருத்தும் பொறுப்பு இவரிடம் வழங்கப்பட்டது. இவர் கூறிய அனைத்துதிருத்தங்களும் அதில் சேர்க்கப்பட்டன.

சங்க இலக்கியங்கள், சங்கமருவிய இலக்கியங்களில் இடம்பெற் றுள்ள இலக்கியச் சொற்களைத் தொகுத்து ‘இலக்கியச்சொல்அகராதி’ வெளியிட்டார். பண்டைக்கால இலக்கியங்கள் பயில்வோருக்கு பெரும் துணையாக அமைந்துள்ள நூல் இது.ஆசிரியர், கவிஞர், கட்டுரையாளர், சமயச் சொற்பொழிவாளர், பன்மொழி வல்லுநர் என பன்முகத் திறன் கொண்ட குமாரசுவாமிபுலவர் 68-வது வயதில் 1922ல் மறைந்தார். அவர் வாழ்நாளில அவர் ஆற்றிய பணி அளப்பரியது. அவர் வழியில் எமது வரலாற்றைசரியான முறையில் பதிவது எமக்கும் கடமையாகும்” என்று குறிப்பிட்டார். 

கவிஞர் நியாஸ் ஏ.சமத் தலைமையில் இடம்பெற்ற கவியரங்கில் கவிஞர்கள் வெலிப்பனை அத்தாஸ், வாழைத்தோட்டம் எம்.வஸீர், வெலிமடை ஜஹாங்கீர், மிஹிந்தலை பாரிஸ், கம்மல்துறை இக்பால், கலாபூஷணம் பாணந்துறை நிஸ்வான்,கலாபூஷணம் மஸீதா அன்சார், மட்டக்களப்பு லோகநாதன், போருதொட்ட ரிஸ்மி, எம். பிரேம்ராஜ், கிண்ணியா அமீர் அலி, பீர்முஹம்மத், எம்.எச்.எம்.நவ்சர், உடுகொட அய்யாஷ் சுபைர், மேமன்கவி ஆகியோர் கவிதை பாடினர்.

சத்திய எழுத்தாளர் நாகூர் கனி, த.மணி, எஸ்.எச்.எம்.சுபைர், ஜீ.ஜீ.சுனில், இப்ரான்ஷா பௌர்தீன், எஸ்.ஏ.கரீம்,எம்.இஸட்.எம்.சபர் எம்.இஸட்.எம்.சபர் போன்றோர் சபையை அலங்கரித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -