நாடளாவிய ரீதியில் நிலவிய சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்ட மழை, மண் சரிவு அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 44 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தில் சிக்கியே அதிகளவு மாணவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இரத்தினபுரியில் 30 ஆயிரம் மாணவர்கள் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, இயற்கை அனர்த்த்தில் சிக்கி இதுவரை 202 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதில் 44 பேர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.