2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாகக் கூறி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கை விரைந்து முடிக்க வைகோ கோரி இருந்தார். இது குறித்து எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், வழக்கை விரைவாக நடத்தவில்லை என்றால், தன்னை கைது செய்ய அவர் கோரி இருந்தார். குறிப்பாக, ஜாமீனில் வெளிவர விருப்பமில்லை என்று அவர் கூறினார். இதனால், அவருக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இன்றுடன், அவரது 15 நாள் காவல் முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரது நீதிமன்ற காவலை, வருகின்ற 27-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, விவசாயிகள் போராட்டத்தை, மத்திய அரசு கண்டு கொள்ளமால் இருப்பது நல்லதல்ல.
மோடி, விவசாயிகளை சந்தித்து, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.மத்திய அரசு, கர்நாடக அரசுக்கு சாதகமாகவும், தமிழகத்துக்கு பாதகமாகவும் செயல்படுகிறது.மதுவுக்கு எதிராக போராடிய, பெண்ணை தாக்கிய காவல்துறை அதிகாரியை சஸ்பெண்ட் செய்யவில்லை என்றார்.
இந்நிலையில், வைகோவை பார்க்க, ம.தி.மு.க தொண்டர்கள் எழும்பூர் நீதிமன்ற வளாகத்துக்கு குவிந்தனர்.
அவர்களிடம், சற்று நேரம் உரையாடிய வைகோ மீண்டும், சிறை செல்வதற்காக வாகனத்தில் ஏறிய போது கண்கலங்கினார்.
விகடன்