1987ம் ஆண்டு இந்தியா இலங்கை உடண்படிக்கையின் மூலம் கிழக்கு முஸ்லிம்கள் மீது அடிமை சாசனம் எழுதப்பட்டபொழுது நமக்கென்றதொரு கட்சியோ, தனித்துவமான அரசியல் குரலோ இருக்கவில்லை.
முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபக தலைவர் அஸ்ரபின் மறைவின் பின்னர் 2002ம் ஆண்டு நோர்வே அனுசரணையில் இடம் பெற்ற, முஸ்லிம்களை காவுகொள்ள எத்தனித்த ஒப்பந்தத்தின் போது நமக்கென்று கட்சி இருந்தது. அது பலமாகவும் இருந்தது. ஆட்சிக்கு முக்குக் கொடுக்கும் வகையில் அரசியல் சக்தியாகவும் உயர்ந்திருந்தது. அவ்வொப்பந்தத்தின் பொழுது முஸ்லிம் சமூகத்தினை ஒரு குழுவாகவே சித்தரித்து முத்திரையிட்டு முஸ்லிம்களுக்கு மீண்டும் ஒரு அடிமை சாசனம் எழுதப்பட்டது. அதன் பொழுது முஸ்லிம்கள் உருவாக்கிய கட்சியின் தலைமை குறித்த நிகழ்ச்சிக்கும் அதன் நடத்துனர்களுக்கும் உடந்தையாக இருந்தமையானது முஸ்லிம்களின் வரலாற்றில் முதன்மை வடுவாகவே இருந்து வருகின்றது.
இதனால் கட்சியின் நிஜ போராளிகளுக்கும், ஹக்கீம் காங்கிரஸ் காரர்களுக்குமிடையில் போரட்டம் நடைபெற்றது. கட்சியின் யாப்பும் கட்டுப்பாடும், ஹக்கீம் மீதான வெளிசக்திகளின் ஆதிக்கமும் காரணமாக கட்சிக்குள்ளிருந்து கொண்டு முஸ்லிம் மக்களின் விடுதலைக்காக சுதந்திரமாக குரல் கொடுக்க முடியாமல் போனது. அதனாலேயே கட்சியினை வளர்த்தவர்கள் கட்சியினை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும் தனி வழியில் பயணித்து தலைவர் அஸ்ரபின் பணியினை அவர் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து செல்வதற்காக தேவையானவைகளில் பிரதானமானவைகளை சாதிக்க முடியுமாக இருந்தது.
அந்த வகையிலே இன்று சமகாலத்தில் முஸ்லிம் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைகளை கருத்தில் கொண்டும், இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு, புதிய அரசியல் அமைப்பு, அதிகாரபகிர்வு, தேர்தல் முறை மாற்றம், தொடர்பாகவும் விஷேட சூழ்ச்சிகளுக்குள் சிக்க இருக்கும் கிழக்கு மாகாண மக்கள் தொடர்பாக ஆழமாக சிந்திப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் கடந்த 02.04.2017 அக்கறைப்பற்று அதாவுல்லா மண்டபத்தில் முதற்கட்டமாக கிழக்கினை மையப்படுத்தி கிழக்கின் அவயம் எனும் பெயரில் புதிஜீவிகள், உலமா பெருமக்கள், அரசியல் ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடக்களான ஒன்று கூடலை தேசியத்திற்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துக்காட்டும் முகமாக ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் முக்கிய பேச்சாளர்களாக இராஜாங்க அமைச்சர் அல்-ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மற்றும் முன்னாள் அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் ஆகியோர்கள் கலந்து கொண்டதுடன் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் புத்தி ஜீவிகள் என கிழக்கின் மூன்று மாவட்டங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தி மேடையில் பிரசன்னமாயிந்தனை அவதானிக்க கூடியதாக இருந்தது. அது மட்டுமல்லாமல் அதாவுல்லா அரங்கம் ஓன்றுகூடலுக்காக அழைக்கப்பட்டிருந்தவர்களால் நிரம்பி இருந்தமையானது அதவுல்லாவின் கிழக்கின் அவயம் எனும் எழுச்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாகவும் பார்க்கப்படுகின்றது.
கிழக்கின் அவயம் எனும் ஒன்று கூடலில் இடம் பெற்ற நிகழ்வின் காணொளி எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.