பராக்கிரமபாகு காலத்தில் எமது நாடு விவசாய மற்றும் நெல் உற்பத்தி துறையில் எவ்வாறு தன்னிறைவு கண்டதோ அவ்வாறு இப்பொழுதும் தன்னிறைவு கண்டு மேலதிக உற்பத்திகளை வெளி நாடுகளிற்கு ஏற்றுமதி செய்து சுபீட்சமுள்ள விவசாய சமூகமாகவும் உணவுப் பாதுகாப்பில் நிலைபேறான விவசாய சமூகமாகவும் எமது நாடு மாற வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை மூதூர் கமநல சேவைகள் நிலையத்தில் விவசாய அபிவிருத்தி உத்தியோத்தர் MF. சாபி தலைமையில் மூதூர் விவசாய சம்மேனங்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதன் போது மூதூரின் 13 விவசாய சம்மேளனங்கள் கலந்து கொண்டு தங்களது மகஜர்களையும் கையளித்தனர் இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
ஜனாதிபதி விவசாயதுறையில் கூடுதல் ஈடுபாடு காட்டுகின்றார். தற்போது BMICH இல் நஞ்சற்ற தேசத்தை எதிர் கால சந்த்ததியினருக்கு வழங்குவோம் எனும் தொனிப் பொருளில் கண்காட்சி நடாத்தி விவசாயத்துறையை மேம்படுத்தி வருகிறார் பிரதமர் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கையில் விவசாய துறையில் முதலீடு செய்ய ஊக்குவிக்கின்றார், அரசு விவாயிகளுக்கான மானியங்களை வழங்குகின்றன ஆனால் கடந்த அரசு நாம் பயிரிடுவோம் நாட்டை கட்டியெழுப்புவோம் என்று கூறி நாட்டின் பொருளாதாரத்தை சூரையாடினர் . நாட்டில் 18இலட்ச விவசாய குடும்பங்கள் வாழுகின்றன 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்களில் நெற்செய்கை இடம்பெறுகிறது. இருந்தும் வருடா வருடம் தொன் கணக்கில் அரிசியை இறக்குமதி செய்கின்றன.
அண்மையில் ஏற்பட்ட வரட்சி காரணமாக விவசாயம் பாதிப்படைந்தது அரசு நிவாரணம் வழங்க காத்திருக்கின்றது அதற்கான நானும் என்னாலான முயற்சியினை எடுப்பேன் விவசாயிகளை கைவிடமாட்டோம் எனக்கு வழங்கப்பட்ட மகஜரிற்கு விரைவில் தீர்வினை பெற்றுத்தருவேன் என பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
ஊடகப்பிரிவு.