அம்பாறையில் பிந்தங்கிய பிரதேச வைத்தியசாலைகள் அபிவிருத்தி..!

சப்னி அஹமட்-
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் விசேட நிதிகளின் ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடடங்கள், திருத்த வேலைகளை மேற்கொண்ட வைத்திய கட்டிடங்கள் ஆகியன நேற்று (01) கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திராச கலபதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

அந்தவகையில்; 23இலட்சம் ரூபா நிதியில் ராஜகலதென்ன பிரதேச இருந்த அமைக்கப்பட்ட சுகாதார பரிசோதக நிலையமும், ஹிமுதுராவ பிரதேசத்தில் புதிதாக 08மில்லியன் ரூபா நிதியில்அமைக்கப்பட்ட சுகாதார பரிசோதக நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வும், 23இலட்சம் ரூபாநிதியில் ராஜகலதென்ன பிரதேச இருந்த அமைக்கப்பட்ட சுகாதார பரிசோதக நிலையத்தினைதிறந்து வைக்கும் நிகழ்வும், 3.3 மில்லியன் ரூபா நிதியில் வீரகொட பிரதேசத்தில் உள்ள மத்தியமருந்தகத்திற்கான வைத்தியர் விடுதி திறந்து வைப்பும், திருத்தி அமைக்கப்பட்டமருந்தகத்தகமும் திறந்து வைக்கப்பட்டது.

அங்கு உரையாற்றிய அமைச்சர்;

கிழக்கு மாகாணம் முழுவது எமது அமைச்சசினால் எந்த இன பாகுபாடும் இல்லாமலும் எமது சுகாதார வேலைத்திட்டங்கள் தொடர்கிறது. குறிப்பாக பிந்தங்கிய பிரதேசங்களின் சுகாதார அபிவிருத்தில் எமது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு அதிக ஈடுபாட்டுடன் செயற்பட்டு மக்களுக்கு சிறந்து சுகாதாரத்தை வழங்க வேண்டும் எனற நோக்கில் நாம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். அதேவேளை கிழக்கு மாகாணத்தில் வைத்தியர் பிரச்சினைகள் அதிகம் உள்ளதால் வைத்தியர் தட்டுப்பாடு காணப்படுகின்றது ஆகவே அதற்கான விசேட திட்டங்களையும் எமது மத்திய சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

மேலும், குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் தட்டுப்பாடும் எமது பிராந்தியங்களில் காணப்படுவதானல் நாம் அதற்கேற்றாப்போல் ஒவ்வொரு பிராந்தியங்களில் இருந்தும் சீரான முறையில் பகிர்ந்து வருகின்றோம் மிக விரைவில் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் கிடைக்கவுள்ளார்கள் அவரிகளில் சிலரை நாம் இங்குள்ள மக்களின் நலன்கருது வழங்க தயாராகவுள்ளதுடன். ஆம்புலன்ஸ் பிரச்சினைகள் உள்ளது குறிப்பாக 10 வாகாணங்கள் எமக்கு அவசராமகவுள்ளதால் நாம் அதுபற்றி மத்திய சுகாதார அமைச்சரிடம் பேசியுள்ளோம் அதுவும் எமக்கும் மிக விரைவில் கிடைக்கும். எனவும் அவர் அங்கு உரையாற்றினார்.

இதன்போது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மஞ்சுலபெணாண்டோ, மெத்தானந்த டி சில்வா, சந்திர பொடி மேனிக்க,உஹன பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திலக் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -