அக்கரைப்பற்றில் லங்கா சதோச விற்பனை நிலையத் திறப்பு விழா இன்று (09) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இதன்போது அங்கு உரையாற்றுகையில்,
நாடளாவிய ரீதியில் உள்ள மக்கள் நலன் பெறும் வகையில் பல்வேறான அபிவிருத்திகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். அதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் பல்துறை அபிவிருத்திகள், இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்பு மற்றும் இம்மாவட்டத்திலுள்ள கரும்புச் செய்கையாளர்களின் பிரச்சினை, நுரைச்சோலை வீட்டுத்திட்டம் உள்ளிட்ட மக்கள் எதிர்நோக்கும் பல்வேறான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம் என தெரிவித்தார்.