2,000 மில்லியன் ரூபா செலவில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி.!

பிறவ்ஸ்-
ரலாற்றில் என்றுமில்லாதவாறு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு 2,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதனை சகல வசதிகளும் கொண்ட வைத்தியசாலையாக நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சம்மாந்துறை, செந்நெல் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தொகுதி திறப்புவிழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றுகையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது,

நான் அண்மையில் சவூதி அரேபியாவுக்கு சென்றபோது சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உப தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். இதன்மூலம், இலங்கையிள்ள ஆதார வைத்தியசாலைக்கு ஒதுக்கப்படும் தொகையில் அதிகபட்சமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு 2,000 மில்லியன் ரூபா நிதி வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. அதற்கான திட்டமிடல் பணிகள் தற்போது நடைபெற்றுள்ளன.

வெளிநாட்டு கடனுக்காக விண்ணப்பிக்கும் இலங்கை நிறுவனத்தின் சார்பாக எமக்கு கோரிக்கை விடுக்கப்பட்டால், ஒரு வருடத்துக்குள் குறித்த 2,000 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு சவூதி அபிவிருத்தி நிதியம் வாக்குறுதியளித்துள்ளது. அந்த நிதி எமக்கு கிடைத்தவுடன் வரலாற்றில் என்றுமில்லாதவாறு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படும்.

சம்மாந்துறை, செந்நெல் கிராமத்திலுள்ள அல்ஹம்றா பாடசாலை வளாகத்திலுள்ள ஒரு பகுதியில் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையை திறந்துவைத்துள்ளோம். இந்த வைத்தியசாலையை இங்கு நிர்மாணிப்பதற்கு எதிர்த்தரப்புகளிடமிருந்து பல எதிர்ப்புகள் வந்தாலும் அதனை ஒரு பொருட்டாக கருதாமல் இன்று வைத்தியசாலையை தரமுயர்த்தி திறந்து வைத்துள்ளோம். அத்துடன் இந்த அல்ஹம்றா பாடசாலைக்கு 3 மாடிக் கட்டிடம் நிர்மாணிக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

சம்மாந்துறை கைகாட்டி சந்தியிலிருந்து நீதிமன்றம் தாண்டி அம்பாறை வீதி வரை பாதை அவிருத்திக்காக நான் 30 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளேன். அதற்கான வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த வீதியை அமைக்கும்போது இருமருங்கிலும் உடற்பயிற்சி செய்யக்கூடியளவு நடைபாதை அமைப்பது குறித்தும் நாங்கள் சிந்தித்து வருகிறோம். அதற்கான மேலதிக செலவுகளை ஆராய்ந்தபின்னர் அவற்றையும் எங்களால் செய்யமுடியும்.

கல்முனை - சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தி திட்டத்தின் திட்டமிடலுக்காக மாத்திரம் 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டத்தை வரைவதற்காக மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியலாளர்கள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்துறைசார் அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்த திட்டமிடல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிந்தவூர் மக்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கிணங்க, இந்த அபிவிருத்தி திட்டத்துக்குள் நிந்தவூரையும் சேர்த்துக்கொள்வதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.

சம்மாந்துறை பிரதான வீதியை அகலமாக விஸ்தரித்து நடுவில் வீதி விளக்குகளை பொருத்தி, வீதியோரங்களில் வர்த்தக நிலையங்களை அமைக்கும் திட்டமொன்றை மன்சூர் எம்.பி. முன்மொழிந்திருக்கிறார். பாரிய செலவில் செய்யப்படவுள்ள அந்த வேலைத்திட்டத்தையும் எதிர்காலத்தில் எப்படியாவது நாங்கள் செய்துகொடுப்போம்.

சம்மாந்துறையில் பல்நோக்கு கூட்டுறவுக்கு சொந்தமான காணியொன்று கவனிப்பாராற்று பாழடைந்து கிடக்கின்றது. அதனை கிழக்கு மாகாண முதலமைச்சர் எமக்கு பெற்றுத் தந்தால், அங்கு பஸ்தரிப்பு நிலையம், சந்தைத்தொகுதி போன்றவற்றை அமைத்து பயனள்ள அழகிய இடமாக மாற்றித்தருவோம்.

நெய்னாகாட்டில் அதிகளவில் செங்கல் சூளைகள் இருப்பதால் அங்குள்ள குடிநீர் பல்வேறு நிறங்களில் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை. அங்குள்ள மக்கள் சுத்தமான குடிநீரின்றி படும் அவஸ்தைகளை நான் நேரில் சென்று அவதானித்தேன். அதன்பின்னர் எனது அமைச்சின் மூலமாக 50 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டத்தை ஓரிரு வாரங்களில் திறந்து வைக்கவுள்ளோம். இதன்மூலம் அங்குள்ள 150-200 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -