அக்கரைப்பற்று மகாசக்தி நிறுவனத்தின் மகளீர் தின நிகழ்வும் கௌரவிப்பும்.!

க்கரைப்பற்று மகாசக்தி அமைப்பினால் சர்வதேச மகளீர் தினம் மற்றும் சேமிப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு அமைப்பின் தலைவர் திருமதி துளசிமணி மனோகரராஜா தலைமையில் 23.03.2017 அன்று காலை 10.00 மணியளவில் மகாசக்தி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதற்கு பிரதம அதிதியாக விவசாய, மீன்பிடி கூட்டுறவு, கால்நடை அமைச்சர் திரு.கி.துரைராஜசிங்கம் அவர்களும், அதிதிகளாக கூ. அ. உ. ஆணையாளர் பு. ராஜினி, கூ.அ.உ.ஆணையாளர், ஜனாப் எம்.எம்.யுனைதீன், கிராம சே.நிருவாக அதிகாரி, A.தர்மதாச, இணையத்தலைவர் வி.பரமசிங்கம், விபுலானந்த இல்லத்தலைவர், த.கைலாயபிள்ளை, கூ.அ..உத்தியோகத்தர்களான ஜனாப் A.L.ஆதம்பாவா, ஜனாப் M.C.ஜலால்டீன், ஜனாப் Y.L.M.பௌஸ், திரு.வி.வரதராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

மேலும் இந்நிகழ்வின்போது 314 அங்கத்தவர்களுக்கும் 195 பூந்தளிர் சிறுவர்களுக்கும் சேமிப்பில் அதிகூடிய சேமிப்பாளர்களான 06 சேமிப்பாளர்களுக்கும் ஊக்குவிப்புப்பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்துடன் மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஏற்பாட்டுக்குழு மற்றும் ஊழியர்கள் சார்பில் மகாசக்தி நிறுவனத்தின் தலைவி திருமதி.எம்.துளசிமணி மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திருமதி.பு.ராஜினி அவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்று நிகழ்வு இனிதே நிறைவுற்றது.







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -