நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
மலையக பாடசாலைகளில் காணபடும் தொழில்நுட்ப பீடம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் உரிய முறையில் பாவிக்கபடும் சந்தர்பத்திலேயே மலயகத்தில் வைத்தியர்கள்¸ பொறியியலாளர்கள்¸ உட்பட ஏனைய தொழில்நுட்பசார் அறிஞர்கள் உருவாக்க முடியும் என்று கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இரதாகிருஸ்ணன் அவர்கள்.
தெரிவு செய்யப்பட்ட மத்திய மாகாணம் உட்பட ஏனைய மாகாணங்களில் ஆயிரம் பாடசாலை செயற்திட்டத்துக்குள் வாங்கப்பட்டிருக்கும் பாடசாலைகளில் உள்ள தொழில்நுட்ப பீடம்¸ தொழில் நுட்ப ஆய்வு கூடங்களில் நிலவிவரும் குறைபாடுகள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முகமாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் நடமாடும் சேவை ஒன்று நுவரெலியா பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இந்த நடமாடும் சேவையில் அமைச்சர் உட்பட மேலதிக செயலாளர் அனுராத விஜேகோன்¸ பணிப்பாளர் கட்டிட நிர்மான வேலைத்திட்டம் கலாநிதி வை.அபேசுந்தர¸ மகாண பொருயியலாளார்கள¸; வலய கல்வி அதிகாரிகள்¸ உட்பட அமைச்சின் அதிகாரிகள் கலந்துக் கொண்டார்கள் இதன் போது இங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது வருகை தந்திருந்த பாடசாலைகளின் அதிபர்கள் தங்கள் பாடசாலைகளில் காணப்படும் குறைகள் மற்றும் பிரச்சனைகளை முன்வைத்தனர். இந்த பிரச்சனைகள் குறித்து ஆராயப்பட்டு உடனடியாக தீர்வுகள் வழங்கப்பட்டது. இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அவர்கள் குறிப்பாக இலங்கையில் தொழில்நுட்ப கல்வியை அபிவிருத்தி செய்யும் அதே நேரம் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியின் ஊடாக தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கவும் மலயகத்தில் வைத்தியர்கள்¸ பொறியியலாளர்களை உறுவாக்கவும் இந்த வேலைத்திட்டம் முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. இந்த வேலைத்திட்டங்கள் அனைத்தம் எமது அமைச்சின் ஊடாக முன்னெடுத்து வரப்படுகின்று. தொழில்நுட்ப பீடம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு கூடங்களில் காணபடும் குறைகளை நேரடியமக எம்மிடம் வந்து கூறினால் அதற்கான தீர்வுகள் எம்மால் பெற்றுக் கொடுக்க முடியும்.
பெரும்பாலான தொழில்நுட்ப பீடம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு கூடங்களில் பொருட்டகளின் தட்டுபாடு காணப்படுகின்று. இதை அதிபர்கள் எம்மிடம் பெற்றுக் கொள்ளவும். பெரும்பாலான பாடசாலைகளில் தொழில்நுட்ப பீடம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் மாணவர்களின் பாவனைக்கு வழங்காமல் காணப்படுவதாக எமக்கு தகவல்கள் கிடைக்க பெற்று வருகின்றன. அதனை உறுதி செய்ய எமது அமைச்சில் இருந்து அனைத்து பாடசாலைகளுக்கும் விஜயம் ஒன்றினை மேற்க் கொள்ள உள்ளது. சில கணணிகளில் உத்திரவாத காலம் முடிவடைந்தும் மாணவர்களுக்கு இவை பாவிக்க வழங்காமை வருத்ததிற்குறிய விடயமாகும். இவை மாணவர்களுடையது.
இவர்களில் வாழ்க்கையில் யாரும் விளையாட கூடாது. எனவே அதிபர்கள் இவற்றை பாவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்க் கொள்ள வேண்டும். ஏதும் பிரச்னைகள் இருந்தால் எம்மிடம் கூறி உறிய தீர்வினை பெற்று சிறந்து மாணவ சமூதாயத்தை உறுவாக்க வேண்டும் என்று மேலும் கூறினார்.