காத்தான்குடியில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகள் இன்றும் ஆரம்பம்..!

எம்.ரீ.ஹைதர் அலி-
கிழக்கு மாகாணத்தில் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாகவும் வினைத்திறன் மிக்கதாயும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று 2017.03.21ஆந்திகதி-செவ்வாய்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் மாகாண சபைக்ககட்டடத்தில் நடைபெற்றது. இவ்டெங்கு ஒழிப்பு பணியில் முப்படையினரும் ஈடுபட வேண்டுமென்ற தீர்மானம் ஒன்றும் இதன்போது மேற்கொள்ளப்பட்டது. 

இக்கூட்டத்தில் மாகாண சபையின் தவிசாளர், மாகாண அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள், தலைமைச்செயலாளர், முதலமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர்கள் உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

அதற்கமைவாக 2017.03.22 ஆந்திகதி - புதன்கிழமை (இன்று) டெங்கு உருவாகக் கூடிய இடங்களை கண்டறிந்து சிரமதானங்களை மேற்கொள்ளும் முகமாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக், இராணுவ வீரர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நகர சபையின் ஊழியர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -