அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை அருள் மிகு சிறி பத்திரகாளி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேக மாமலர் "பாதகமலர்" வௌியீட்டு விழா நேற்று மாலை (28) 5.30 மணியளவில் அருள்மிகு சிறி பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான திருமண மண்டபத்தில் கலாபூஷனம் வித்துவான் வசந்தா வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கலந்து கொண்டார்.
இதில் திருகோணமலை அருள்மிகு சிறி பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் ஆதின கர்த்தாவும் பிரதம குருவுமான சிவசிறி சோ.இரவிச்சந்திர குருக்கள் முதலாவது பிரதியினை எதிர்கட்சி தலைவரிடம் வழங்கி வைப்பதுடன் விஷேட பிரதிகளை பிரதேசத்திலுள்ள குருக்கள் மார்களுக்கு வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.