அரசியல் வியாபாரிகளால் மருதமுனைக்கு அநீதி

மருதமுனை கலீல் முஸ்தபா-

சில அரசியல்வாதிகளின் அரசியல் இருப்பை பாதுகாப்பதற்காக மருதமுனை மண்னுக்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய அபிவிரித்திகளையும், அதிகாரங்களையும் கெளரவங்களையும், மகுடங்களையும் ,பெறபடமுடியாமல் நன்கு திட்டமிட்டு, புறக்கணிக்கபடுவது தன்மானமுள்ள ஒவ்வொரு மருதமுனை மகனாலும் ஏற்று கொள்ள முடியாத மிகவும் கண்டிக்க வேண்டிய விடயமாகும்.

மருதமுனையில் சுமார் 12000 ஆயிரம் வாக்குகள் இருந்தும், சில அரசியல் கைக்கூலிகளின் அரசியல் வியாபாரத்தால் காலத்துக்கு காலம் மருதமுனை மக்கள் ஏமாற்றப்பட்டு , அரசியல் அதிகாரத்தை இழந்து , மருதமுனையின் தேவைகளை கெளரவமாக பெற்று கொள்ள முடியாத அரசியல் அநாதைகளாக மருதமுனை மக்கள் காணப்படுகின்றார்கள்.

2017-03-11 ஆம் திகதி சனிக்கிழமை கல்முனையில் இடம்பெற்ற அபிவிரித்தி தொடர்பான கூட்டத்தில் மருதமுனை காரியப்பர் வீதி புணர் நிர்மான வேலைகளை நிறுத்துவதர்குரிய நடவெடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளது.

சுமார் ஒரு கீ.மீ நீளமான மருதமுனை காரியப்பர் வீதியை காபட் வீதியாக புணர் நிர்மானம் செய்வதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிறஸ் கட்சியின் தலமையினால் ( I Road project ) மூலம் மேற்கொள்ளப்பட்ட வீதி புணர்நிர்மான வேலைகள் ஆரம்பிக்கும் நிலையில் அதை தடுத்து நிறுத்துவதற்கு மருதமுனையை சேர்ந்த சாணகியர் இனம் கண்ட உன்மையான போராளி முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஒருவரின் குற்றசாட்டின் பெயரில், முஸ்லிம் காங்கிரசின் கெளரவத்தை பாதுகாக்க ஆரம்பிக்கபடவிருக்கும் காரியப்பர் வீதி வேலையை தற்காலிகமாக தடுத்து நிறுத்துவதற்காக கெளர பிரதி அமைச்சர் அவர்கள் பிராந்திய பொறியியலாளர் மற்றும் மாநகர ஆனையாளர் போன்றொர்களுக்கு சனி கிழமை இடம் பெற்ற அபிவிரித்தி கிழு கூட்டத்தில் பணிப்புரை விடுத்தாக பேசப்படுகின்றது.



கடந்த காலங்களிலும் சுணாமியால் பாதிக்கப்பட்ட மருதமுனை மக்களுக்காக முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் அவர்களினாலும் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் கொண்டு வரப்பட்ட பல அபிவிரித்தி திட்டங்கள் இந்த அரசியல் சாணக்கியர்களின் விருப்பத்துக்கு அப்பால் செய்ய முடியாமல் தடுத்து நிறுத்தபட்டுள்ளாதாக மக்கள் விசனப்படுகின்றனர்.

மலேசியா அரசின் மலாக்கா வீட்டு திட்டம் மற்றும் , துருக்கி அரசின் தனி வீட்டு திட்டம், மற்றும் சவுதி அரசின் கிராம திட்டம் , வீடமைப்பு அதிகாரசபையின் பல அடுக்கு மாடி வீட்டு திட்டம் போன்றவைகளும்

அரச சார்பற்ற நிறுவனங்களான UNHCR பாரிய வடிகான் திட்டம் , ICTAD நிறுவனத்தின் பாரிய கடற்கரை வீதி அபிவிரித்தி ,ZOA ,வீட்டு திட்டம் என பல அபிவிரித்தி திட்டங்களாகும்

சாணக்கியர்களின் அரசியல் இருப்பை பாதுகாப்பதற்காக மருதமுனை அரசியல் கைக்கூலிகளை பயன்படுத்தி வீதி மறியல் போராட்டங்கள் என பல பிரச்ச்னைகளை உருவாக்கி பாதிக்கபட்ட மக்களைல் பிழையாக வழிநடத்தி,,மருதமுனைக்கு நியாயமான முறையில் கிடைக்கவேண்டிய அபிவிரித்தி வேலைகளையும் இவ்வாறுதான் தடுத்துள்ளார்கள் என பாதிக்கபட்ட மக்கள் அவலப்படுகின்றனர்.

அரசியல் அதிகாரம் இல்லாத மருதமுனை மக்கள் யாரு குத்தினாலும் அரிசி தேவை என்ற நிலையில் அவர்களின் கல்லைக்குள் மண் அள்ளி போடுவது எந்த வகையில் நியாயம்!

சாணக்கியர்களே!

12000 வாக்குள்ள மருதமுனை மண்னுக்கு வழங்கிய அரசியல் அதிகாரம் என்ன ?

மருதமுனையில் சுமார் 13 SLAS இருந்தும் கல்முனை பிரதேச செயலகத்துக்கு பிரதேச செயலாளராக ஒரு மருதமுனையானை நியமிக்க முடியாதன் மர்மம் என்ன ?

மட்டகளப்பு மத்தி கல்வி வலயத்துக்கு தகமையடிப்படையில் வலய கல்வி பணிப்பாளராக தெரிவு செய்யப்பட்ட மருதமுனையை சேர்ந்த உமர் மெளலான அவர்கள் இதுவரைக்கும் நியமிக்கப்படாமைக்கான மர்மம் என்ன ?

கல்முனை கரையோர மாவட்ட கோரிக்கை கைவிடப்பட்டதன் மர்ம்மும் மருதமுனைதான் என்றும் மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது!

2012 ஆம் ஆண்டு கல்முனை பிரதேச செயலகத்தில் பயிலுனராக சேர்த்து கொள்ளபட்ட பட்டதாரிகளுள் இதுவரைக்கும் மருதமுனையை சேர்ந்தவர்கள் மட்டும் 17 பேர் மீண்டும் பயிலுனராக உகனை போன்ற பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதில் மர்மம் என்ன ?

மருதமுனையின் வடக்கு திசையாக 1990 ஆண்டுக்கு க்கு பின்னர் கைவிடப்பட்ட சுமார் 120 ஏக்கர் குடியிருப்பு காணிகளில் மீழ் குடியேற்ற சாணக்கியர்கள் எடுத்த நடவெடிக்கை என்ன?

சுணாமியால் தங்களின் குடுப்ப உறுப்பினர்களை இழந்த மக்களுக்காக கட்டப்பட்ட 65 மீற்றர் வீட்டு திட்டம் உரியமக்களுக்கு பகிர்ந்தளிக்க எடுக்கப்பட்ட நடவெடிக்கை என்ன?

மருதமுனையின் கைத்தறி புடவை நெசவு உற்பத்தி தொழிலை பாதுகாக்க அல்லது அபிவிரித்தி செய்ய எடுத்த நடவெடிக்கை என்ன ?

அல்மனார் மத்திய கல்லூரியின் 2017 ஆம் ஆண்டுக்கான இல்ல விழையாட்டு போட்டி நிகழ்வு அரசியல்வாதிக்காக முதலாம் தவணையிலிருந்து இரண்டாம் தவணைக்கு மாற்றப்பட்டு மருதமுனை கல்வியிலும் அரசியல் விழையாட்டு?

அரசியல் வியாபாரிகளே!

ஒரு பாராளுமண்ற உறுப்பினரின் .வீட்டு வேலைக்காரரை விடவும் கல்முனை மாநகருக்கு பல ஆயிரம் வாக்குகள் அள்ளி கொட்டிய மருதமுனையான் பெறுமானம் இல்லையா ?

பிரதி மேயார் தொடக்கம் பாராளுமணற பதவி வரை சகல அரசியல் அதிகாரங்களையும் மருதமுனைக்கு அப்பால் வைதுள்ள சாணக்கியர்கள் இவ்வாறு மருதமுனைக்கு அவ்வப்போது கிடைக்கும் உதவிகளை தடுத்து நிறுத்தவது மிகவும் கண்டனத்துகுரிய விடயமாக மக்களால் உணரப்படுகின்றது.

அரசியல் அதிகாரமில்லாத மருதமுனை மக்கள் கீரைக் கடைக்கு எதிர்கடை தேவை, யாரு குத்தினாலும் அரிசி என்ற தேவையை உணர்ந்துள்ள நிலையில் தீர்க்கப்பட வேண்டிய பல தேவைகளும்,தவிப்புகளும் , பிரச்சினைகளும் காணப்படுகின்றன இவற்றை பெற்று கொள்ள முயற்சிக்களை மேற்கொள்ள முடியாவிட்டாலும் உங்களுக்கு வாக்களித்த மக்களுக்காக உதவிகள் அபிவிரித்திகள் செய்பவர்கள் யாராக இருந்தாலும் செய்பவர்களை செய்ய விடுங்கள்..

சாணக்கியர்கள் அரசியல் இருப்பை தக்க வைப்பதற்காக மருதமுனை மண்னுக்கு நியமாக கிடைக்க வேண்டிய மகுடங்களையும் , அபிவிரித்தி உதவிகளையும் கிடைக்க விடாமல் தொடர்ந்தும் தடுப்பதை தன்மானம் உள்ள மருதமுனை மக்களும்,புத்திஜீவிகளும்,இளைஞர்களும் அனுமதிக்கும் காலம் வெகுதூரமில்லை என்று கருதபடுகின்றது

கலில் முஸ்தபா
Bsc,and Dip in Acc & Finance


சுணாமியின் பின்னர் முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் அவர்களால் மருதமுனைக்கு கொண்டுவரப்பட்ட பல அடுக்கு மாடி வீட்டு திட்டங்களை யும் அபிவிரித்திகளையும் போராளிகளை வீதியில் இறக்கி உன்னாவிரதம் இருந்து போராட்டம் செய்து இவ்வாறுதான் தடுத்தார்கள் என்று மக்கள் தெருவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -