அவரை வேலைக்கு எடுத்த சவூதி அரேபிய அரபி புதிய வீட்டுக்கு இடம்மாறிய போது மாபில்தரையில்வழுக்கி விழுந்துகால்கள் உடைந்து காயங்களுக்கு உள்ளானார்.
அவ்வீட்டு எஜமான் அல் சக்திஸ் சரவ்னாவை வைத்தியசாலைக்கு அனுப்பி சகல செலவுகளையும் செய்துவந்தார்.வீட்டுப்பணிப்பெண்சரூனாவால் எந்த வேலைகளும் செய்ய முடியாத நிலை ஆனால் அந்த எஜமான் நாட்டிற்கு திருப்பி அனுப்பாமல் அந்த வீட்டில் ஒருவரப்போல் பராமரித்து மதிப்பளித்து வருவது முன்னுதாரணமாகும்.
இது தொடர்பாகஅல் சக்திஸ் கருத்து தெரிவிக்கும் போது சரூனா 1989ம் ஆண்டு எமது வீட்டுக்குப் பணிப் பெண்ணாக பணி புரிய அழைத்து வரப்பட்டாள். நாம் புதிய வீட்டுக்குமாறிய போது தடுக்கி விழுந்து காயங்களுக்கு உள்ளாகினார்.
அவரால் எந்தப் பணிகளை செய்ய முடியாமல் போனது.
அவரை நாம் வீட்டுக்கு அணுப்பாமல் எமது வீட்டில்ஒருவராக வைத்து பராமரித்து.மேலும் அவர் எம்முடன் இருக்கும் காலம் அவரை சிறந்த முறையில் கவணித்துக் கொள்வோம் என்றார்.
சரூனா ஒரு ஆளுமைமிக்க பணிப்பெண். எம்மையும், எமது குழந்தைகளும் சிறந்த முறையில் கவணித்து வந்தார். என்பதை இங்கு நான் கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என்றார்.தற்போது அவர் எமது வீட்டில் பணிபுரியும் 4 பணிப் பெண்களுக்கு சூபர்வைசராகவும், எமது வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களைக் கொள்வனவு செய்பவராகவும் இருக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பாக சரூனா கருத்து தெரிவிற்கும்போது”நான் விபத்துக்கு உள்ளாகியுள்ள போதும் தங்களது வீட்டில் உள்ள ஒரு அங்கத்தவர்களைப் போன்று என்னைக் கண்காணித்துக் கொள்கின்றார்கள்” என்றார்.
இது அல் அரபிய்யா ஆங்கிலத் தளத்தில் வந்த செய்தி.
ஆனால் இவர் இலங்கையில் எந்தப் இடத்தைச் சேர்ந்தவர் தொடா்பான விடயங்கள் எதுவும் அங்கு தெரிவிக்கப்படவில்லை. தெரிய வரும் போது பதிவிட காத்துக் கொண்டு இருக்கின்றோம்.
நன்றி- மீராஷாஹிப் சைனுடீன்