கண்ணீரில் கிண்ணியா

Mohamed Nizous

கண்ணீர் வருகிறது
கிண்ணியாவின் செய்திகளால்
டெங்கெனும் கொடிய நோயால்
சங்கடத்தில் மாட்டி நிற்கும்
அங்குள்ள மக்களுக்காய்
இங்குள்ளம் தவிக்கின்றது.

சின்னஞ் சிறுசுகளும்
சீவனுக்காய் போராட
என்ன செய்வதென்று 
எல்லோரும் ஏங்குகிறார்.
கரங்களை ஏந்துகிறார்
கண்ணீரில் நீந்துகிறார்.
இருக்கின்ற பிள்ளைகளை
இறைவா நீ காப்பாயென
உருக்கமாய் வேண்டுகிறார்
உள்ளுக்குள் நடுங்கிறார்.

பிள்ளையின் ரத்தத்தில்
பிலேட் குறையுதென்று
சொல்லுகின்ற போதே
உள்ளம் உடைந்து போகும்
படிப்படியாய் குறைந்து
பாலகன் போராட
அடிப்படை புரிந்து போக
அடி மனம் அழும் தனியாய்.

ஆண்டவனின் சோதனையில்
மாண்டவர்க்கு மன்னிப்பும்
நோய்கள் நீங்கவும்
நுளம்புகள் அழியவும்
இரவுத் தொழுகைகளில்
இறைவனிடம் பிரார்த்திப்போம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -