தெல்லிப்பளை கட்டுவன் பகுதியில் பாரிய வெடிகுண்டு மீட்பு..!

பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் மேற்கு கல்லோடை பிள்ளையார் கோயில் வடக்கு வீதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பாரிய வெடிகுண்டு ஒன்றினை இன்று(21) தெல்லிப்பளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்திய தயாரிப்பான இக் குண்டு 30 வருடங்களுக்கு முன்னர் இந்திய இராணுவத்தினால் புதைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 25 முதல் 30 கிலோக்கு இடைப்பட்டதாக இக்குண்டின் நிறை காணப்படுவதுடன் வெடிக்க வைப்பதற்குரிய உரிய தகடு மீட்கப்பட்ட குண்டில் பொருத்தப்படாமையினால் இவ்வாறு நீண்ட காலமாக இருந்துள்ளதாகவும் இக்குண்டு இருக்கும் பகுதியை குழந்தை ஒருவர் தோண்டியதன் காரணமாகவே கண்டபிடிக்கபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னரும் 20அடிக்கு ஒன்று என்ற முறையில் 3 குண்டுகள் அப்பகுதியில் மீட்கப்பட்டிருந்தாகவும் இது நான்காவது வெடி பொருள் என பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது குறித்த குண்டு மல்லாகம் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சனநடாட்டமற்ற அப்பகுதி கடற்கரையோரமாக விசேட அதிரடிப்படையினர் உதவியுடன் செயலிழக்கம் செய்யப்பட்டது.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -