மாகாண சபைத் தேர்தலில் கல்குடாவில் மு.கா ஒரு ஆசனத்தை கைப்பற்றும் - கிழக்கு முதலமைச்சர்

ம்முறை மாகாண சபைத் தேர்தலில் கல்குடாத் தொகுதிக்கான ஆசனத்தை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் என கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். கல்குடா தொகுதியில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல கோடி ரூபாபெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து அப்பகுதி வாழ்மக்களின் வாழ்க்கைத் தரத்த மேம்படுத்த பல்வேறு தி்ட்டங்களை முன்னெடுத்து வருகின்றது எனவும் அவர் கூறினார்.

கல்குடாத் தொகுதியில் மீராவோடை உதுமான் முன்பள்ளிக்கு தளபாடங்கள்வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதேகிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக்குறிப்பிட்டார். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை முஸ்லிங்களின் தனித்துவக்கட்சியெனவும் அது மறைந்த பெருந்தலைவர் மர்ஹும் அஷரப் அவர்கள் எதை இந்த சமூகத்துக்கு பெற்றுக் கொடுக்க எண்ணிணாரோ அதனையே இந்தக் கட்சி தற்போது பெற்றுக் கொடுத்துவருவதாக கிழக்கு மாகாணமுதலமைச்சர் தெரிவித்தார்.

அது மாத்திரமன்றி இந்தக் கல்குடா தொகுதியிலிருந்து இந்தக் கட்சியைகாப்பாற்றுவதாக இறைவன் மீது ஆணையிட்டு தேர்தலில் குதித்த சிலர் பின்னர் போராளிகளை ஏமாற்றிவிட்டு வேறு கட்சிகளில் சுகபோகங்களை அனுபவிப்பதை போராளிகள் மறந்து விடவில்லை , ஆனால் நாங்கள் கல்குடா மக்களை ஏமாற்றவுமில்லை ஏமாற்றபோவதுமில்லை,ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் முயற்சியால் இந்தப் பிரதேசங்களுக்குஇன்று 400 மில்லியனுக்கும் அதிக நிதியில் பாரிய குடிநீர்த் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டு இதனூடாக இந்த மக்களின் நீண்ட நாள் பிரச்சினையான குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு கிட்டவுள்ளது,

இந்தத் திட்டங்களை நாம் இனமத பேதங்களுக்கு அப்பாற்பட்ட ரீதியிலேயே முன்னெடுத்து வருவதுடன் கிரானிலிருந்து ஆரம்பிக்கப்படும் இந்த குடிநீர்கட்டமைப்பு கல்குடா முழுதும் சென்றடையவுள்ளது, கல்குடா பகுதி மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை குறித்து பலர்புரிந்து கொள்ளாத நிலையில் நாம் அவற்றை நன்கறிந்து அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்து வருகின்றோம், அது மாத்திரமன்றி இம்முறை கல்குடாவில் ஶ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் ஒரு ஆசனத்தை கைப்பற்றும் எனவும் அந்த ஆசனத்தை கைப்பற்றும் முயற்சியில் கல்குடா மக்களுடன் தாமும் கைகோர்த்துதுணை நிற்கவுள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்கூறினார்.

பல்வேறு காலகட்டங்களில் அபிவிருத்தி செயற்பாடுகளினால் புறக்கணிக்கப்பட்ட பல பகுதிகள் கடந்த இரண்டு வருடங்களில் பலஅபிவிருத்திகளை அடைந்து கொண்டுள்ளமையை கண் ஊடாகக் காணமுடியும் என கிழக்கு முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டார்,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -