எச்.எம்.எம். பர்ஸான்-
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் இன்று (23) ம் திகதி மாணவ பாராளுமன்ற தேர்தல் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
60 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் இத்தேர்தலுக்காக 90 வேற்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் வெற்றி பெறும் உறுப்பினர்களில் பிரதமர், சபாநாயகர், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் எனத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இத் தேர்தலை கண்காணிப்பதட்காகா மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகரும் தேர்தலுக்கான இணைப்பாளருமான சலாம் அவர்களும் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே. ரகுமான், ஆசிரிய ஆலோசகர் எம்.பீ. சித்தீக் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.