பாரிய எதிர்ப்பு நடவடிக்கை - ஜே.வீ.பி எச்சரிக்கை

மு.இராமச்சந்திரன்-
திர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி சம்பளவுயர் கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு தொழிலாளர்களுக்கு சம்பளவுர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் அவ்வாறு அல்லாத பட்சத்தில் தொழிலாளர்களை ஒன்றுத்திரட்டி பாரிட எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட போவதாக அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஜே.செல்வராஜா தெரிவித்தார். 

28.03.2017 அட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். 

ஊடகசந்திப்பின் போது அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் எம்.ஏ.பிரேமரட்ன உப செயலாளர் கே.கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து உடகவியாலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் 1999 ஆண்டு முதல் இன்று வரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுரை முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு உடன்படிக்கை தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர்களுக்கு சம்பளவுயர்வு அல்லது உடன் படிக்கையை புதுப்பித்தல் என்பது கைச்சாத்திடுவது சட்டமாகும் ஆனால் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளமும் உரிய நேரத்தில் கைச்சாத்திடுவதில் பின்நிற்கின்றனர் அந்த வகையில் 2015 ஏப்ரல் 1 ம் திகதி நிறைவடைந்த கூட்டு உடன்படிக்கை 2017.04.02 மீண்டும் புதுப்பீத்திருக்கவேண்டும். 

அவ்வாறாயின் எதிர்வரூம் ஏப்ரல் 1 ம் திகதி கூட்டு கூடன்படிக்கை மீண்டும் கைச்சாத்திட வேண்டும் இனியும் தொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் ஏமாற்ற இடமளிக்க முடியாது முதலாளிமார் சம்மேளனமும் கூட்டு உடன்படிக்கை தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களுக்கு சம்பளவுயவை பெற்றுக்கொடுக்காத பட்டிடத்தில் அகில இலங்கை தோட்டதொழிலாளர் சங்கம் தொழிலாளகளை ஒன்று திரட்டி தொழிற்சங்கங்களுக்கும் இதற்கு ஆதரவாக செயற்படும் அரசுக்கும் பாரியஎதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோம் மேலும் தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வைகையில் தோட்டவாரியாக சென்று துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து வருவதுடன் உடகத்தினூடாக உடக மாநாட்டை நடத்தி வருகின்றோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -