போதைக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்த நல்லாட்சி ,மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான லைசன் வழங்குகிறது-மகிந்த ராஜபக்ஷ

ன்று போதைக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்த நல்லாட்சி ,மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான லைசன் வழங்கி குடியை ஊக்குவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

இன்று பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

இந்த நாட்டில் போதைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக மார்தட்டிக்கொண்டு வந்த இவ் அரசாங்கம்,இன்று மதுபான உற்பத்தி தொழிற்சாலை அமைக்க லைசன் வழங்கி குடியை ஊக்குவிக்கின்றது.

எமது காலத்தில் மாதுபான விற்பனை நிலையத்துக்கு லைசன் வழங்கப்பட்டதாக விமர்சித்தவர்கள்,இன்று மதுபான உற்பத்தி தொழிற்சாலை அமைக்க லைசன் வழங்கியுள்ளார்கள்.நல்லாட்சி என்பது பேச்சில் மாத்திரமே உள்ளது.இவர்களின் செயற்பாடுகள் எதிலுமில்லை என அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -