முப்பத்தெட்டாயிரம் ரூபா பணப்பையை கண்டெடுத்து கையளித்த பொலிஸ் உத்தியோகத்தர்

பழுலுல்லாஹ் பர்ஹான்-

டந்த 17ம் திகதி மட்டக்களப்பு பிரதான வீதியில் கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் 61217 -பொலிஸ் உத்தியோகத்தர் ஏ.ரீ.எம்.சுபியானினால் கண்டெடுக்கப்பட்ட பெண் ஒருவரின் பணப்பை நேற்று 23 வியாழக்கிழமை கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஏ.ரஹீம் முன்னிலையில் உரிய பெண்ணிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது .....

38000.00 முப்பத்தெட்டாயிரம் ரூபா பணம், சம்பத் வங்கி ஏ.ரீ.எம். பண வரவு அட்டை என்பவற்றுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஏ.ரீ.எம்.சுபியானினால் மட்டக்களப்பு பிரதான வீதியில் கண்டெடுக்கப்பட்ட குறித்த பணப் பை யாருடையது என்பதை கண்டுபிடித்து ஒப்படைப்பதற்கு எந்த தகவலும் பணப் பையில் கிடைக்காத காரணத்தால் பணப் பையில் இருந்த சம்பத் வங்கி ஏ.ரீ.எம். பண வரவு அட்டையை வங்கியில் கொடுத்து பணப் பை உரிமையாளரான மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை தேவபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த கனேஷன் சுகந்தினி என்ற பெண்ணின் தகவலைப் பெற்று அப் பெண்ணுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பணப் பை உரிமையாளரான மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை தேவபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த கனேஷன் சுகந்தினி நேற்று 23 வியாழக்கிழமை கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு வருகைதந்து 38000.00 முப்பத்தெட்டாயிரம் ரூபா பணம், சம்பத் வங்கி ஏ.ரீ.எம். பண வரவு அட்டை என்பவற்றுடன் தனது பணப் பையை சந்தோஷமாக எடுத்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -