காற்று மாசடைவதனைக் கண்டறிய புறாக்களைப் பயன் படுத்தலாம் -விஞ்ஞானிகள்

கரங்களின் பொதுப் பூங்காக்களில் புறாக்களின் அட்டகாசம் பலருக்கு கோபத்தை தந்திருக்கலாம். ஒரு காலத்தில் காதலுக்கு தூதுபோன புறாக்களை காற்று மாசடைதலைத் தடுக்க இப்போது விஞ்ஞானிகள் பயன்படுத்த திட்டமிடுகின்றனர். நெரிசல் மிகுந்த நகர கட்டிடங்களுக்கு மேலே காற்றின் தரத்தை அறிய புறாக்களை விஞ்ஞானிகள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

பர்மிங்காம் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் புறாக்களை வைத்து காற்று மாசடைதலை கண்டறிய முடியும் என்று கூறுகிறார்கள். ரிக் தொமஸ் இந்த நுண்ணிய கருவியை புறாக்களின் பின் பகுதியில் இணைக்க திட்டமிட்டுள்ளார். கூரையின் மேல் இருக்கின்ற வெப்ப நிலை தெரிந்தால், நகர்ப்புற காற்றின் மாசு மாதிரியை கண்டறியலாம் என்று கூறினார். புறாவின் நலனை முன்னிட்டு இவற்றின் எடை புறாவின் எடையில் 5 வீதம் மாத்திரமே, மிகவும் சிறியது. பறப்பதை பதிவு செய்வதற்காக இன்னொரு புறாவில் நுண்ணிய கேமரா இணைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -